கரீபியன் இருபதுக்கு 20 போட்டிகளில் இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் விளையாட ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்து இட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி போட்டிகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதமளவில் இடம்பெறவிருப்பதாக அறியப்படுகின்றது.
உலகின் முன்னணி கிரிகெட் வீரராக திகழும் முத்தையா முரளிதரன், 2011 ஆம் ஆண்டு சர்வதேச கிரிகெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றதன் பின்னர் தற்பொழுது இடம்பெற்று வரும் IPL T – 20 போட்டிகளில் ராயல் சலேன்ஜெர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் .
மேற்கிந்திய தீவுகள் அணியில் தமக்கு பல நண்பர்கள் இருகின்றனர் அவர்கள் நாட்டு நல நிதிக்காக நடத்தப்படும் மேற்படி கரீபியன் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுவது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக போட்டி ஏற்பாட்டு குழுவினரிடம் முரளி தெரிவித்துள்ளார்.
கரீபியன் T - 20 போட்டிகளில் 6 அணிகள் விளையாட உள்ளன. எதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதி வாரை போட்டியாளர்களுக்கான தேர்வு இடம்பெறும் அதே நேரம் மேற்படி போட்டிகள் ஜூலை மாதம் 29 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வரை கரீபியன் தீவுகளில்இடம்பெற விருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது