உணவு ஒவ்வாமை காரணமாக ருஹுனு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது,
26 மாணவர்கள் இவ்வாறு மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய சாலையின் இயக்குனர் வைத்தியர் சமிந்தி சமரகோன் தெரிவித்துள்ளார்.
மேற்படி மாணவர்கள் வாந்தி மற்றும் வயிற்று போக்கு உபாதைகளுடன் அனுமதிக்கப்பட்டு தற்பொழுது சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.