
2014 உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் ஆஜன்டீனா அணியை ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் வென்ற ஜேர்மனி அணி செம்பியன் பட்டத்தை பெற்றது.
போட்டிக்காக வழங்கப்பட்டடிருந்த நேரத்தில் இரு அணிகளும் கோல் போடவில்லை. அதனால் மேலதிக 30 நிமிடம் வழங்கப்பட்டது. இந்த 30 நிமிடத்தின் முதல் பகுதியிலும் கோல் எதுவும் போடப்படவில்லை. இந்நிலையில் இறுதி நேரத்தில் போட்டியின் 113ஆவது நிமிடத்தில் ஜேர்மனி வீரர் மரியோ கோட்செ கோல் ஒன்றை எடுத்ததன் மூலம் ஜேர்மனி அணி 24 வருடங்களுக்குப் பிறகு உலகக்கிண்ணக் கனவை நனவாக்கிக் கொண்டது.
ஜேர்மனி அணி வெற்றி கொண்ட நான்காவது உலகக் கிண்ணம் இதுவாகும். இதற்கு முன்னர் 19541974- 1990ஆம் ஆண்டுகளில் ஜேர்மனி உலகக் கிண்ணத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



