BREAKING NEWS

Oct 18, 2013

நடிச்சது போதும்... - த்ரிஷா திடீர் முடிவு


தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேல் தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாகத் திகழும் த்ரிஷா, இனி புதிய படங்களில் நடிக்க மாட்டேன் என மறுப்பு தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

திருமணம் செய்து கொண்டு செட்டிலாகத் திட்டமிட்டுள்ளதாலேயே இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக 'ஆயிரத்தோராவது முறையாக' கொளுத்திப் போட்டுள்ளனர் கோடம்பாக்கத்தில்.

 30 வயதைத் தாண்டிவிட்ட த்ரிஷா இப்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஒரு படம். கிட்டத்தட்ட இந்தப் படங்களின் ஷூட்டிங்குகள் முடியும் கட்டத்தில் உள்ளன. 

திரிஷாவுடன் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் இப்போது வெளிப்படையாகவே நெருக்கம் காட்ட ஆரம்பித்துளளனர்.

 இருவரும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதால், த்ரிஷா புதுப்படங்களில் நடிக்க மறுத்து வருவதாகக் கூறுகிறார்கள். 

சமீபத்தில் அவரை ஒப்பந்தம் செய்யச் சென்ற தயாரிப்பாளருக்கு, 'இனி படம் நடிக்கிறதா இல்ல' என்று கூறிவிட்டாராம் த்ரிஷா.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By OddThemes &