மின் பாவனை துண்டித்தல்களுக்கு இதுவரை காலமும் விதிக்கப்பட்டு வந்த மேலதிக வட்டி விதிப்பனவுகள் இனி விதிக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பிந்தியமின் கட்டண கொடுப்பனவுகளுக்கான வட்டி வீதத்தின் அளவும் குறைப்பதற்கு இலங்கை மின்சார சபையினரிடம் கேட்டுக்கொண்டதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதன் படி பிந்திய கொடுப்பனவுகளுக்கு இதுவரை விதிக்கப்பட்ட 2 % மேலதிக வட்டி 1.24 சதவீதமாக குறைக்கப்படுவதை உத்தியோகபூர்வமாக தெரிவிப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த வட்டிவீதத்தின் சந்தை பிரதிபலிப்பினை தொடர்ந்தும் ஆய்வு செய்து வருவதாக் ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலைகள், உணவு விடுதிகள்ஆகியனவற்றுக்கு கட்டண அவகாசம் 15 நாட்களுக்குள் வழங்கப்படும் அதே நேரம் வீட்டு மின் பாவனைகளுக்கான தவணை அவகாசம் 30 நாட்களாக வழங்கப்பட்டும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காலக்கெடு தவறும் பட்சத்திலேயே கட்டணங்களுக்கான வட்டி அரவீடும் அறவிடப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மின் கட்டணம் தொடர்பில் பானையாளர்கள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையிலேயே மேற்படி மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது வாய்மொழி மூலமான இந்த அறிவிப்புகள் எதிர்வரும் 7 ஆம் திகைத்தி முதல் நடைமுறைக்கு வரும் என ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஆயினும்இந்த மாற்றங்களுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இயக்குனர் சபையின் அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Apr 1, 2013
மின் துண்டிப்பு : இனி மேலதிக வட்டி அறவீடுகள் இல்லை
Posted by AliffAlerts on 13:07 in NL | Comments : 0