ஸ்மார்ட் போன்களின் பயன்பாட்டினைக் கணக்கிட்ட காம் டாட் ஸ்கோர் நிறுவனம் இதனைக் கண்டறிந்துள்ளது. ஸ்மார்ட் போன்களில் 53.4% போன்கள், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றன.
இதனை அடுத்து, ஆப்பிள் நிறுவனத்தின், ஐ.ஓ.எஸ். சிஸ்டம், 36.3% கொண்டுள்ளது. பிளாக் பெரி மூன்றாவது இடத்தையும், விண்டோஸ் போன் நான்காவது இடத்தையும் கொண்டுள்ளன.
விண்டோஸ், முன்பு இருந்த பங்கில், 0.7 % குறைந்து, 2.9 % மட்டுமே கொண்டுள்ளது. இது எதனால் ஏற்பட்டது? விண்டோஸ் போன் 8, சர்பேஸ் சாதனங்கள் என மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்த போது, விண்டோஸ் போன் சிஸ்டம், ஸ்மார்ட் போன்களில் அதிக அளவில் இடம் பிடிக்கும் எனவே எதிர்பார்க்கப்பட்டது.
இந்த எதிர்பார்ப்பிற்கு உரம் சேர்க்கும் வகையில் நோக்கியாவின் லூமியா வரிசை போன்கள் விண்டோஸ் போன் சிஸ்டத்துடன் வெளிவந்தன. ஆனால் அது நடக்கவில்லை.
இந்த மந்த நிலைக்குக் காரணம் கூகுள் தான். விண்டோஸ் போன் 8 சிஸ்டத்தில் இயங்கும் வகையில், அப்ளிகேஷன்களைத் தயாரித்து வழங்கப் போவதில்லை என்று அறிவித்து, விண்டோஸ் போன் 8 பயன்படுத்துபவர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை எனவும் அறிவித்தது.
இதற்குக் காரணம், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் போன் 8 சிஸ்டம், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சிஸ்டங்களைக் காட்டிலும் திறன் கொண்டது என மக்களிடம் எடுத்துச் சொல்லவில்லை, செல்லவில்லை.
எனவே ஆண்ட்ராய்ட் போன் சிஸ்டத்திற்கான போட்டியில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ்.6 ஆகியவையே முன்னணியில் ஓடிக் கொண்டிருக்கின்றன. இனி விண்டோஸின் வளர்ச்சி குறையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
BY: Global Technology Solutions and Innovations
BY: Global Technology Solutions and Innovations