BREAKING NEWS

Jun 17, 2013

இராக்கில் கார் குண்டுகள் வெடிப்பு

இராக்கில் எட்டு ஊர்களில் வரிசையாக கார் குண்டுகள் வெடித்தத்தில் குறைந்தது முப்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒப்பீட்டளவில் பாதுகாப்பான இடமாக இருந்துவந்த நாட்டின் தென்பகுதி இந்த குண்டுத் தாக்குதல்களில் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது.

சாதாரணப் பொதுமக்களை இலக்குவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

நசிரியாவிலும் பஸ்ராவிலும் ஜனசந்தடி மிக்க சந்தைப் பகுதியில் குண்டுகள் வெடித்துள்ளன.

நாட்டின் வடக்கே - அதிலும் குறிப்பாக மோசுல், சலாஹுத்தீன் போன்ற ஊர்களில் நடந்த குண்டுத் தாக்குதல்களில் பாதுகாப்புப் படைகள் இலக்க்வைக்கப்பட்டிருந்தனர்.

தலைநகர் பாக்தாத்துக்கு அருகில் உள்ள குட் என்ற ஊரில்தான் மிக அதிகமானோரை பலிகொண்ட தாக்குதல் நடந்ததாக பொலிசார் கூறுகின்றனர்.

குட் நகரில் கட்டிடத் தொழிலாளிகளை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஷியா மக்கள் செறிந்து வாழும் இடங்கள்தான் இந்த குண்டுத் தாக்குதல்களில் அதிக சேதங்களைச் சந்தித்திருக்கின்றன என்றாலும் சுனி மக்கள் வாழும் இடங்களிலும் பாதிப்பு இருப்பதாக பாக்தாத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &