கட்டாரில் பிரதி வியாழன் தோறும் மாலை 8.30க்கு தாய்மொழி தமிழில் தூய இஸ்லாத்தை படிக்க வாராந்த வகுப்பை SLDC – QATARஏற்பாடு செய்துள்ளது
கட்டாரில் வாழும் தமிழ் பேசும் சமூகத்துக்கு தாய்மொழி தமிழில் தூய இஸ்லாத்தை படிக்க வாய்ப்பேற்ப்படுத்திக் கொடுக்கும் SLDC– QATAR இன் முயற்சிகளின் தொடரில் நீண்ட முயற்சி மற்றும் திட்டமிடலின் பின் குடும்ப சகிதம் ஆண் பெண் அனைவரும் கலந்துகொள்ளும் வசதியுடன் அன்றாட வாழ்வுக்கு அவசியாமான அடிப்படை இஸ்லாமிய வழிகாட்டலை வழங்கும் ஒரு வாராந்த வகுப்பை ("வாராந்த ஈமானிய அமர்வு") SLDC – QATAR ஏற்பாடு செய்துள்ளது என்பதை அறியத்தருவதில் மகிழ்ச்சியடைகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷாஅல்லாஹ் வியாழன் தோறும் மாலை 8.30க்கு நாடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள இவ்வகுப்பு நாளை முதல் ஆரம்பமாகின்றது. Qatar Airways tower, Al mana tower (Toyoda signal area) க்குப் பின்னுள்ள அல் கசாபி பள்ளியில் எமது நிகழ்சிகள் நடைபெறும். மேலதிக விபரங்களுக்கு இணைப்பைப் பார்க்கவும்.
ஸ்ரீ லங்கா தஹ்வா சென்ட்டர்
தோஹா, கத்தார்