எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துனையால் பறகஹதெனிய ஜமாஅத் அன்ஸார் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் மற்றும் ஒரு வெளியீடாக சிங்கள மொழியிலான அல்குர்ஆன் மொழியாக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். தரமான முறையில் சிறந்த அறிஞர் குழாத்தின் மூலமாக மேற்கொள்ளப் பட்டிருக்கும் இப்பணி உண்மையில் இலங்கை திருநாட்டின் பெரும்பான்மை இன மக்கள் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு வழி சமைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
முக்கிய கலைச் சொற்களுக்கான விளக்கம், மாற்று மதத்தவர்கள் புரிந்து கொள்ளும் விதமான அறிமுகக் குறிப்பு என இதன் சிறப்பம்சங்களின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது. சிங்களத்தை தாய் மொழியாகக் கொண்ட மக்களுக்கு மாத்திரமல்ல சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் எமது சமூகத்தை சார்ந்த மாணவச் செல்வங்களுக்கும் பெரும் பயனாக இருக்கும் என நம்புகின்றோம்.
கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழ் மொழியில் மிகச் சிறந்த அல்குர்ஆன் மொழியாக்கம் ஜமாஅத் அன்ஸார் ஸுன்னா அல்முஹம்மதிய்யாவினால் வெளியிடப்பட்டு அது சமூகத்தில் பெரும் அங்கீகாரம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பாரிய பணியை செய்த மற்றும் இவ் வெளியீடு வெளிவர அனைத்து வகையிலும் உதவிய அனைவருக்கும் அருள் பாளிப்பானாக!