மத்திய மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் சகல இன மக்களையும் நேரடியாக சந்தித்து கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகளுக்கு செவி சாய்த்து ஆலோசனைகளை வழங்கியவாறு தனது தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் அசாத் சாலி இன்றைய தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக கலகெதரவுக்கு வருகை தந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிடத்தக்களவு மக்கள் ஒன்ருகூடியிருப்பதும் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டதும் விசேட அம்சமாகும்.
ஏற்கனவே அசாத் சாலி கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.