BREAKING NEWS

Sep 3, 2013

NOKIAவை வாங்கும் MICROSOFT

நோக்கியா நிறுவனத்தின் 7.2 பில்லியன் டாலர்கள் மதிப்பு வாய்ந்த தொலைபேசி வர்த்தகத்தை அமெரிக்கா தொழில்நுட்ப பெருநிறுவனமான மைக்ரோசாஃப்ட் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.
உலகளவில் மொபைல் தொலைபேசிகள் தயாரிப்பில் ஒரு காலத்தில் நோக்கியாவே முன்னணியில் இருந்தது.
ஆனால் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்கள் வந்த பிறகு, சந்தையில் நோக்கியாவின் பங்கு வேகமாக குறைந்தது.
எனினும் நோக்கியாவை மைக்ரோசாஃப்ட் வாங்கும் திட்டத்துக்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஸ்மார்ட் ஃபோன்: பின் தங்கிய மைக்ரோசாஃப்ட்


ஆப்பிள் மற்றும் கூகள் நிறுவனங்களின் ஆண்ட்ராய்ட் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, ஸ்மார்ட் ஃபோன் சந்தையில் பின்தங்கியுள்ள மைக்ரோ சாஃப்ட், அச்சந்தையில் போட்டியிட நோக்கியாவின் வர்த்தகத்தை கையகப்படுத்துவது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையில் மென்பொருள் வர்த்தகத்தை மட்டுமே மையப்படுத்தி வந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம், நோக்கியாவின் தொலைபேசிப் பிரிவை விலைக்கு வாங்குவதன் மூலம் உபகரணங்கள் தயாரிப்பிலும் இறங்குகிறது.
இதையடுத்து கணினி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளில் விளையாடப் பயன்படும் கருவிகள், டாப்லெட் கணினிகள், மொபைல் தொலைபேசிகள் ஆகிய அனைத்தையும் தயாரிக்கும் நிறுவனமாக மைக்ரோசாஃட் மாறும்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &