இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 20 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நான்காயிரத்து 312 பரீட்சை நிலையங்கள் இதற்கென நிறுவப்படவுள்ளன.
பரீட்சையில் தோற்றுவதற்கு ஐந்து இலட்சத்து எண்பதாயிரத்து நூறு பரீட்சார்த்திகள் தகுதிபெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்று இலட்சத்து, எண்பத்து நான்காயிரம் பாடசாலை பரீட்சார்த்திகளும், ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து நூறு தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 48 பாடப் பிரிவுகளின் கீழ், இடம்பெறவுள்ளது.
சாதாரண தரப் பரீட்சைக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளில் 36 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.
விடைத்தாள் திருத்தும் பணிகளில் 35 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.