பரகஹதெனியவை பிறப்பிடமாகவும் சவுதி அரேபியா பிரஜாவுரிமையைப்பெற்று சவுதி அரேபியாவை வசிப்பிடமாகவும்கொண்ட அஷ்ஷேக் ரியால் சீலாணி (சாதிக் ஹாஜியார்) அவர்கள்
சவுதி அரேபிய குர்ஆன் மற்றும் கிதாபுகள் புத்தகங்கள் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் சவுதி அரசாங்கத்திடமிருந்து அன்பளிப்பாக பெறப்பட்ட சுமார் 30,000 அல்குர்ஆன் மற்றும் பெறுமதி வாய்ந்த கிதாபுகள் இலங்கையில் உள்ள மத்ரஸாக்கள், அநாதை நிலையங்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களுக்கு விநியோகிக்கும் நிகழ்வு 20/10/2015 ஜம்ய்யதுஸ் ஸபாப் நிறுவன கேட்போர் கூடத்தில் மெளலவி எம்.எஸ்.எம் தாஸிம் தலைமையில் இடம் பெற்றது.
இதில் சவுதி அரேபிய பிரதிநிதி, சவுதி அரசாங்கத்திடமிருந்து அல்குர்ஆன் பிரதிகளை பெற்றுத்தந்த சவுதி அரேபிய குர்ஆன் மற்றும் கிதாபுகள் புத்தகங்கள் பிரிவின் தலைவர் ஸாதிக் ஹாஜியார், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பிரதிநிதிகள் , முஸ்லிம் கலாசார திணைக்கள பிரதிப்பணிப்பாளர் மற்றும் நிறுவன தலைவர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்
இதில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.