BREAKING NEWS

Jun 9, 2013

பிரசவத்திற்கு பின் பிறப்புறுப்பில் வலி ஏற்பட காரணங்கள்!!!

why you have vaginal pain after delivery
பிரசவத்திற்கு பின் பெண்களின் உடல் முழுவதும் காயமாக இருக்கும். இதனால் உடல் முழுவதும் வலியுடன் இருக்கும். இத்தகைய வலிகள் குறைந்தது 1-2 வாரத்திற்கு மேலாவது இருக்கும். அதிலும் பிரசவத்திற்கு பின், பிறப்புறுப்பில் ஏற்படும் வலிக்கு அளவே இருக்காது.

 மேலும் இந்த வலியானது ஏற்படுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்த வலி, குழந்தை பிறப்புடன் தொடர்புடையது. இப்போது இந்த பிறப்புறுப்பு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். 

* சுகப்பிரசவத்தின் போது, குழந்தையை வெளியே தள்ளுவதற்கு அதிகப்படியான அழுத்தத்தை பெண்கள் தரவேண்டியிருக்கும். அழுத்தமானது போதாமல் இருந்தால், குழந்தையின் தலையானது யோனி குழாயில் நீண்ட நேரம் இருக்க வேண்டியிருக்கும். ஆகவே அதிகப்படியான அழுத்தத்தை பெண்கள் தருவதால், பிறப்புறுப்பில் வீக்கம் மற்றும் வலியானது சில வாரங்களுக்கு இருக்கும். 

* சில நேரங்களில் சுகப்பிரசவத்தின் போது குழந்தையை வெளியேற்ற பெண்கள் கொடுக்கும் அழுத்தத்தினால், குழந்தையின் தலை வெளியே வரும் போது, பிறப்புறுப்பின் தசையை கிழித்துக் கொண்டு வெளிவரும். இதனால் பிறப்புறுப்பில் காயமானது ஏற்பட்டு, அதிகப்படியான வலியை ஏற்படுத்தும். அதிலும் சிறுநீரை வெளியேற்றும் போது தான் அதிகப்படியான வலியை உணர நேரிடும். 

* கர்ப்பிணிகள் சிலரால் போதிய அழுத்தத்தைக் கொடுக்க முடியாததால், குழந்தையின் தலை வெளிவராமல் சிக்கிக் கொள்ளும். அப்போது மருத்துவர்கள், பெண்ணின் பிறப்புறுப்பை லேசாக வெட்டி விட்டு, குழந்தையை வெளியே எடுப்பார்கள். இதனால், சருமம் மட்டுமின்றி, தசையும் வெட்டுப்படுவதால், காயமானது அதிகமாகி வலியை உண்டாக்கும். 

அதிலும் இந்த நிலைமை முதல் பிரசவத்தின் போது தான் நிகழும். இத்தகைய நிலை உள்ள பெண்களுக்கு, காயமானது காய்வதற்கு 1 மாதத்திற்கு மேல் ஆகும். 

இவையே பிறப்புறுப்பில் வலி ஏற்படுவதற்கான காரணங்கள். அதேப் போன்று, சிசேரியன் பிரசவத்தை மேற்கொண்டவர்களுக்கு, பிறப்புறுப்பில் வலி ஏற்படுவதற்கு பதிலாக, அடிவயிற்றில் வலி ஏற்படும்.

BUMS (Hons), Adv. Dip. in Couns. Psychology,
Dip. in Panchakarma & Therapeutic Massage

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &