BREAKING NEWS

Aug 7, 2014

இதோ ஆசியாவின் அதிசயமிக்க நாட்டின் வெளிநாட்டு நியமனங்கள் [VIDEO]


இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி நேற்று கடுமையாக விமர்சித்தது.
வெளிநாட்டு சேவைக்காக வழங்கப்பட்டுள்ள நியமனங்களில் பெரும்பாலானவை அரசியல் நியமனங்களாகும் என சபை
ஒத்திவைப்பு வேளை மீதான பிரேரணையை சமர்ப்பித்து, சபையில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார
திசாநாயக்க குற்றச்சாட்டு முன்வைத்தார்.
இன்று வெளிவிவகார சேவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கிளை சங்கமாக மாறியுள்ளது. இதற்கு என்னிடம்
தேவையான அளவு உதாரணங்கள் இருக்கின்றன.
1.சரத் கோன்கஹகே – ஜேர்மனிக்கான தூதுவர்
ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்
2.நாவலகே பெனட்குரே – இத்தாலிக்கான தூதுவர்
கொலன்னாவைத் தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்
4.காமினி ராஜபக்ஸ -  ஜோர்தானுக்கான தூதுவர்
ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட முன்னாள் உறுப்பினர்
5.எச்.ஆர்.பியசிறி – மியன்மாருக்கான தூதுவர்
ஐக்கிய தேசியக் கட்சியின் திக்வெல்லை உறுப்பினர் (ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மாறியவர்)
6.புத்தி அதாவுத – நெதர்லாந்திற்கான தூதுவர்
அதாவுத செனவிரத்னவின் மகன்
7.உதயங்க வீரதுங்க – 9 வருடங்ககளாக ரஷ்யாவின் தூதுவராக செயற்படுகின்றார்
8.ஜாலிய விக்ரமசூரிய – அமெரிக்காவிற்கான தூதுவர்
9.டிக்ஸன் டயாலா – மாலைத்தீசவிற்கான உயர்ஸ்தானிகர்
தலதா மாளிகையின் பஸ்நாயக்க நிலமேயின் தந்தை
10.ஏ.எஸ்.பி.லியனகே – நைஜீரியாவிற்காக தூதுவர்
காணி வர்த்தகர்
11.ஓசதி அழகப்பெரும – சுவீடனிற்கான தூதுவர்
டலஸ் அழகப்பெருமவின் தம்பி
12.பாரதி விஜேரத்ன – துர்கிக்கான உயர்ஸ்தானிகர்
முன்னாள் அமைச்சர் மனோ விஜேரத்னவின் மனைவி

13.கலாநிதி யுவோன் அமரசிங்க – வியட்னாமிற்கான தூதுவர்
14.சீமால் விக்ரமசிங்க – வியானா பிரதித் தலைவர்
15.வருண ஏபாசிங்க – வொஷிங்டன் காரியாலயம்
16.கருணாரத்ன பரணவிதாரண- ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர், டொரன்டோவின்
கொன்சியுலர் ஜெனரல்
17.டபிள்யு.கே.எஸ்.திஸாநாயக்க – அபுதாபிக்கான செயலாளர்
18. எச்.என்.பி.ரத்நாயக்க – ரஷ்யாவிற்கான உதவி செயலாளர்
சி.பி.ரத்நாயக்கவின் மகன்
19.லயனல் பிரேமசிறி – கனடாவிற்கான பிரதி செயலாளர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக கட்சியின் காலி மாவட்ட அமைப்பாளர்
20.ஹர்ஷன ஹேரத்- சிங்கப்பூரின் இரண்டாவது செயலாளர்
சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தின் மகன்
21.சமித்தரி ரம்புக்வெல்ல- நியூயோகிற்கான இரண்டாவது செயலாளர்
கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள்
22.முத்து பத்மகுமார – லண்டனிற்கான இரண்டாவது செயலாளர்
லேக்ஹவுஸ் தலைவரின் மகள்
23.வைத்தியர் கொடிக் வைத்தியரத்ன – லண்டன் ஆணையாளர் காரியாலயம்
24.ஜே.எம்.பண்டார – குவைத்திற்கான இரண்டாவது செயலாளர்
25.டிக்சன்.ஜே.பெரேரா- கொன்சியுலர் ஜெனரல் – நேபாளம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக கட்சியின் முன்னாள் செயலாளர்
26. ஏ.எம்.ஜ.குடுகேவத்த – முதலாவது செயலாளர் பீஜிங்
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு பிரதானியின் மகள்
27.ரண்ண ரணவீன – கன்பராவிற்கான இரண்டாவது செயலாளர்
28.லலித்.யூ.கமகே – இந்தோனேஷிய தூதுவராலயம்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசியல்வாதி



Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &