BREAKING NEWS

Jun 1, 2013

ஜூன் 3 முதல் கொழும்பு - கண்டி அதிசொகுசு ரயில் சேவை

ஜூன் மாதம் 3 ஆம் திகதி முதல் கொழும்புக்கும் கண்டிக்கும் இடையில் அதிசொகுசு கடுகதி ரயில் சேவையொன்று ஆரம்பித்துவைக்கப்படவிருப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

1864 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக கண்டிக்கும், கொழும்புக்கும் இடையில் அதிசொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவிருப்பதாக அமைச்சர் கூறினார்.

இந்த அதிசொகுசு ரயிலின் 10 பெட்டிகளில் 44 இருக் கைகள் இருக்கும் என்றும், ஒரு வழிப்போக்குவரத்துக்கு ஒருவரிடம் தலா 500 ரூபா அறவிடப்படும் என்று ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த சொகுசு ரயில் வண்டி வாரத்துக்கு ஒருநாள் மாத்திரமே பயணத்தை மேற்கொள்ளும் என்றும், இது ராகம, கம்பஹா, பேராதனை ஆகிய ரயில் நிலையங்களில் மாத்திரமே தரித்து நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். MN

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &