BREAKING NEWS

Jun 1, 2013

இன்று தேசிய வாக்காளர் தினம்

இன்று தேசிய வாக்காளர் தினம்
வாக்குரிமை உள்ளவர்களின் தேசிய தினம் இன்று ஜூன் 1ம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. 

தேர்தல்கள் திணைக்களத்தால் முதல் முறையாக ஜூன் 1ம் திகதி வாக்குரிமை உள்ளவர்கள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள வாக்காளர்களை கௌரவப்படுத்தவும், வாக்கு பதிவின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு அறிவூட்டுவதற்கும் ஜுன் மாதம் முதலாம் திகதியை வாக்காளர் தினமாக தேர்தல்கள் திணைக்களம் பிரகடனப்படுத்தியுள்ளது. 

இலங்கையில் பல்வேறு தினங்கள் கொண்டாடப்படுகின்ற போதும் வாக்காளர்களை கௌரவப்படுத்துவதற்கு என எந்த ஒரு தினமும் கிடையாது எனவே வாக்காளர்களை கௌரவப்படுத்தும் முகமாக ஜுன் முதலாம் திகதி வாக்காளர் தினமாக கொண்டாடப்பட தீர்மானிக்கப்பட்டது. 

இந்நாளில் மக்கள் அனைவரும் வாக்காளர்களாக பதிய வேண்டியதற்கான முக்கியத்துவம் மற்றும் பதிவின் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள் தொடர்பில் விழிப்பூட்டும் வகையில் வேலைத் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன. 

இந்நாட்டுப் பிரஜைகள் அனைவரும் பிழையின்றி தம்மை வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &