கட்டாரிலுள்ள ஸ்ரீ லங்கா தஃவா நிலையம் ஏற்பாடு செய்து நடாத்தும் விஷேட இஸ்லாமிய மாநாடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 01-03-2013 வெள்ளிக்கிழமை அதாவது நாளை மஃரிப் தொழுகை முதல் அல்பனார் கேற்போர்கூடத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இம்மாநாட்டின் பிரதம வளவாளராக சவூதி அரேபிய இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் அழைப்பாளர் அஷ்ஷேய்க் அஸ்ஹர் சீலானி அவர்கள்
"ஈமானில் உறுதி வேண்டும்" எனும் தலைப்பில் பிரதான உரை நிகழ்த்த இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் "பல்லின் சமூகத்தில் முஸ்லிம் சிறுபான்மை" எனும் தலைப்பில் அஷ்ஷேய்க் இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி அவர்கள் விஷேட உரை நிகழ்த்தவூள்ளார்.
அத்துடன் பெண்களுக்கு பிரத்தியேகமான இட வசதி மற்றும் இரவூ உணவூம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றமை விஷேட அம்சமாகும்.
கட்டார் வாழ் அனைத்து முஸ்லிம் சகோதரர்களும் இவ்விஷேட இஸ்லாமிய மாநாட்டில் கலந்து பயன்பெறுமாறு அழைக்கப்படுகின்றீர்கள்
(தகவல்: அர்ஷட் ராஸிக்)