BREAKING NEWS

Mar 1, 2013

மாடு அறுக்க எதிர்ப்பு - பொய் யுரைக்கும் ஊடகங்கள்..!

கொழும்பு - தெமட்டகொடை மாடு அறுத்தல் விவகாரத்தில் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் உண்மைக்கு மாற்றமான கருத்துக்களை வெளியிட்டுவருவதாக முஸ்லிம் இறைச்சிக் கடைகாரர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஹெக்கிராவ பகுதியிலிருந்து சட்டரீதியாக தெமட்டகொடை பகுதிக்கு மாடுகளை கொண்டுவந்து அறுக்கும் ஹனீபா என்ற மொத்த விற்பனை வியாபாரி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலமாக வழங்கிய தகவல்கள் கீழ்வருமாறு,

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் 10 க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்களும், மற்றும் சிலரும் தெமட்டகொடை மாடு அறுக்கும் பகுதியில் காணப்பட்டுள்னர். இவர்கள்தான் நாங்கள் சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதாககூறி அங்கு இடையூறு ஏற்படுத்தினர்.

அங்குவந்த டாக்டர் கொல்வின் என்பவர் பௌத்த தேரர்கள் செயற்பட்ட முறையை கடிந்துகொண்டார். அவர்களின் பௌத்ததுறவி ஆடைக்கே தாம் மதிப்பளிப்பதாகவும், இல்லையேல் குறித்த பௌத்த தேரர்களை அங்கிருந்து வெளியேற்ற முடியுமெனவும் குறிப்பிட்டார். குறித்த மாடு அறுக்கும் பகுதியும், குறித்த பகுதிக்கு கொண்டுவரப்படும் மாடுகள் மற்றும் இறைச்சியும் சட்டரீதியாக நடைபெறுவதாகவும், இதில் பௌத்த தேரர்கள் தலையீடு செய்ய அனுமதியில்லையெனவும் அந்த பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் தெளிவாக குறிப்பிட்டார்.

எனினும் இங்கு ஆங்கில, சிங்கள ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. முஸ்லிம் இறைச்சிக்கடை வியாபாரிகள் சட்டவிரோத வியாபரிகள், சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பவர்கள் போன்று செய்திகளை வெளியிட்டுள்ளமை துரதிஷ்டவசமானது. இந்த ஊடகங்களின் முஸ்லிம் விரோத போக்கிற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவது குறித்து ஆராய்ந்து வருகிறேன் என்றார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &