அமெரிக்காவில் வீசுகின்ற பனிப்புயலினால் ஒருவர்
பலியானதுடன் 6 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்
சுமார் 2,000 க்கும் அதிகமான விமானங்களின் சேவைகள்
இரத்துச்செய்யப்பட்டுள்ளன.
வட- கிழக்கு அமெரிக்க மாநிலங்களிலேயே
உக்கிரமான பனிப்புயல் வீசிக்கொண்டிருக்கின்றது. இதனால், மஸாச்சூசெட்ஸ்
மாகாணத்தில் உள்ள அனுமின் நிலையமொன்று மூடப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்கு கரையோரம் அமைந்துள்ள ஐந்து மாநிலங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மஸாச்சூசெட்ஸ், ரோட் ஐலண்ட், கெனக்டிகட், நியு யோர்க் மற்றும் மயின் போன்ற
மாகாணங்களில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளுக்குள்ளேயே
முடங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சூறைக்காற்றினால்
மரங்கள் பிடுங்கி எறியப்பட்டதால் மின்சார கம்பிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.பல
இடங்களில் ஒரு மீட்டர் உயரத்துக்கு பனி பொழியும் என்று எதிர்வு
கூறப்பட்டுள்ளது. ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் 6
மாநிலங்களை உள்ளடக்கிய நியு இங்கிலாந்து பிராந்தியத்தை பல
தசாப்தங்களுக்குப் பின்னர் தாக்கியுள்ள மிக மோசமான புயல் இதுவென்று வானிலை
நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒன்டாரியோவில் சுமார் 200 வாகன விபத்துக்கள் நடந்துள்ளன. குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Feb 9, 2013
அமெரிக்காவில் பனிப்புயல் 2,000 விமான சேவைகள் ரத்து
Posted by AliffAlerts on 18:37 in NF | Comments : 0