வரகாபொலை நகரில் இன்று பிற்பகல் முஸ்லிம்களுக்கு
எதிராக பொதுபலசேனா அமைப்பினரால் ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்று
முன்னெடுக்கப்பட்டுள்ளது. வரகாபொலை நகர சபைக்கு அண்மையிலிருந்து
ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேர்வரையில்
பங்கு கொண்டதாக அந்த நகரத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஹலால் சான்றிதழ்
தொடர்பில் எதிர்ப்புத்தெரிவிக்கும் வாசகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள்
பயன்படுத்தியதாகவும் முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கொள்வனவை
தவிர்த்துக்கொள்ளுமாறு கோஷமெழுப்பியதாகவும் தெரிகிறது. அத்துடன்
முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான வார்த்தைப்பிரயோகங்களும் குறித்த
ஆர்ப்பாட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வரகாபொலை நகரில் இன்று
பிற்பகல் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேனா அமைப்பினரால்
ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வரகாபொலை நகர சபைக்கு
அண்மையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200
பேர்வரையில் பங்கு கொண்டதாக அந்த நகரத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஹலால் சான்றிதழ்
தொடர்பில் எதிர்ப்புத்தெரிவிக்கும் வாசகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள்
பயன்படுத்தியதாகவும் முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கொள்வனவை
தவிர்த்துக்கொள்ளுமாறு கோஷமெழுப்பியதாகவும் தெரிகிறது.
அத்துடன் முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான வார்த்தைப்பிரயோகங்களும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பெளத்த பிக்குகள் அடங்கிய குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியில்
குறித்த நகரைச் சேர்ந்த எவரும் பங்கு கொள்ளவில்லை என அந்நகரில் வசிக்கும்
ஒருவர் தெரிவித்தார். முன்னதாக ஒரு வீட்டிலிருந்து இருவர் ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொள்ள வேண்டும் என பொதுபலசேனாவால் கோரப்பட்டிருந்ததாகவும் அவ்வூர்
மக்கள் அதனை நிராகரித்துள்ளதாகவும் தெரிகிறது.
அத்துடன் ஹலால் சான்றிதழை பாதணிகள் கொண்டு மிதித்து அதனை அங்குள்ள கடைகளுக்கு விநியோகம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் நடத்தப்படவுள்ளதை அடுத்து நேற்று
பெளத்த மற்றும் முஸ்லிம் தரப்புக்களை உயள்ளடக்கிய விஷேட சந்திப்பொன்று
வரகாபொலை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றதாக உத்தியோகபூர்வமற்ற தகவலொன்று
தெரிவித்தது. இதில் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க வேண்டாம் என
பொலிசார் ஆர்ப்பாட்டத்தரப்பை அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணாமாக
அங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத நிலையில் பொலிசார்
உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இதனிடையே கண்டி நகரில் பொதுபலசேனாவின் மாநாடொன்று
இன்று நடைபெற்றுள்ளது. தேசிய அடையாள அட்டைகளை பரிசோதித்தே குறித்த
மாநாட்டுக்கு கலந்துகொண்டிருந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தமைக்
குறிப்பிடத்தக்கது.