இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸின் மும்பை போலீஸ் படம் சக்கைப்போடு போடுகிறது. பெயரில் மும்பை இருந்தாலும் இது மலையாளப் படம். கதை நடப்பதும் கேரளாவில்.
பிருத்விராஜ், ஜெய்சூர்யா, ரகுமான் நடித்திருக்கும் இந்த க்ரைம் த்ரில்லரை வானளாவ புகழ்கிறார்கள். அந்த புகழில் கொஞ்சம் ஆர்யாவுக்கும் கிடைத்திருக்க வேண்டியது, ஜஸ்ட் மிஸ்ஸிங்.
மும்பை போலீஸில் ஜெய்சூர்யா நடித்திருக்கும் வேடத்தில் முதலில் ஒப்பந்தமானவர் ஆர்யா. எல்லாம் தயாரான பிறகு ரோஷன் ஆண்ட்ரூஸ் மும்பை போலீஸை தள்ளி வைத்து மோகன்லாலின் மெகா பட்ஜெட் படமான கேசனோவாவை இயக்கச் சென்றார். ஆர்யாவின் கால்ஷீட் வீணானது. ரோஷன் மீண்டும் மும்பை போலீஸுக்கு வந்த போது ஆர்யா பிஸி.
மும்பை போலீஸின் வெற்றியின் வீச்சு பாலிவுட்வரை தொட்டிருக்கிறது. ரிமேக் செய்ய துடியாய் துடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என எல்லா மொழிகளிலும் ரிமேக்காகும் சாத்தியம் தெரிகிறது. தமிழில் நடிக்கப் போகிற அதிர்ஷ்டசாலிகள் யாரோ.