Paragahadeniya Central College [National School]: தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை;
வெறும் 5 மாணவர்கள் மாத்திரமே சித்தி
பரகஹதெனிய தேசியப் பாடசாலையில் இருந்து இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு 138
மாணவர்கள் தோற்றியதில் வெறும் 5 மாணவர்கள்(3.5%) மாத்திரமே சித்தியடைந்திருக்கின்றமை மிகவும் கவலைக்கிடமான விடயமாகும். பரீட்சைக்குத் தோற்றிய 96.5% மாணவர்கள் சித்தியடையாமை வருத்தமளிக்கின்றது.
பெற்றோரிடமிருந்து ஆயிரக்கணக்கில் கரந்தும் அதற்குரிய பிரதிபலன் வெளிக்காட்டப்படாமை பெற்றோரின் பணத்தையும் கனவையும் தவிடுபொடியாக்குகின்ற விடயமாக அமைந்துள்ளது.
தொடர்ச்சியாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு மிகவும் மோசமானதாகவே இருந்து வருகின்றது.
பணத்துக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்ததன் பிரதிபலன் தொடர்ச்சியாக தோல்விகளை அளித்துவருவது பாடசாலையின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பதாக அமைந்துவருவது கசப்பான விடயமாகும்.
எனினும் சித்தியடைந்த அவ்வைந்து மாணவர்களுக்கும்(1 மாணவன், 4 மாணவிகள்) எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் சித்தியடைந்தோர் விபரம்
1. M I Aysha Hanin - 170
2. M M Husni - 167
3. M H Reema - 161
4. M M Aamina - 156
5. M H Hudha - 154