BREAKING NEWS

Nov 13, 2013

அக்குறணை யில் உலமாக்க ளுக்கு இலவச வைத்தியப் பரிசோதனை.

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு, கண்டி மாவட்ட உலமாக்களுக்கு இரத்தப் பரிசோதனையையும், விளக்க வரிவுரையொன்றையும் இலவசமாக நடாத்துவதற்கான ஏற்பாடுகளை அக்குறணை Royal Care மருத்துவமனை மேற்கொண்டுள்ளது.

நீரிழிவு நோய் சம்பந்தமான விசேட வைத்திய நிபுணர் Dr. கமால் அப்துல் நாஸர் அவர்களினால் மேற்கொள்ளப்படவுள்ள மேற்படி நிகழ்ச்சித் திட்டம் இம்மாதம் 18ம் திகதி அக்குறணை ரோயல் கெயார் மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.
விளக்கவுரை தவிர்ந்த ஏனைய பரிசோதனைகளுக்கு மாத்திரம் ஒருவருக்கு சுமார் 1500 ரூபாய் செலவாகும். சமூக நலன்கருதியே நாம் இத்திட்டத்தை முன்னெடுக்கின்றோம் என ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இப்பரிசோதனையில் Blood Pressure (BP), Fasting Blood Sugar (FBS) , Lipid Profile, ECG போன்ற பரிசோதனைகள் உள்ளடங்குகின்றன. இப்பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு 12 மணித்தியாலங்கள் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும்.
நிகழ்ச்சிகள் திங்கட்கிழமை 7 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளன. எனவே கலந்துகொள்ள விரும்புகின்ற உலமாக்கள் ஞாயிற்றுக் கிழமை இரவு 7 மணிக்குப் பின்னர் எவ்வித உணவுகளையும் உட்கொள்ளக் கூடாது.
முன்னேற்பாடுகள் சில மேற்கொள்ளவுள்ளதால் கலந்துகொள்வதற்கு விரும்புகின்ற உலமாக்கள் வெள்ளிக் கிழமைக்கு முன்னர் தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்.
மேலதிக விபரங்களுக்கு:0712063080 / 0766844035 அல்லது E Mail: aslamwusl@gmail.com

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &