BREAKING NEWS

Oct 17, 2013

அமெரிக்காவின் அரச பணிகள் மீள ஆரம்பம்









அரசாங்க பணிகளை மீள ஆரம்பித்தல் மற்றும் கடன் உச்ச வரம்பை அதிகரிப்பதல் தொடர்பான வரவு செலவுத் திட்ட உடன்படிக்கை அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆளும் ஜனநாயக கட்சியினரின் கட்டுப்பாட்டிலுள்ள செனட் சபையில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் இந்த உடன்படிக்கைக்கு ஆதராவாக 81 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குடியரசு கட்சியினரின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதிநிதிகள் சபையில் இந்த பிரேரணை வாக்கெடுப்புக்காக அனுப்படவுள்ளது.

இந்த பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக குடியரசு கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கடன் உச்ச வரம்பை 16 தசம் 7 ரில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதற்கான காலக்கெடு நிறைவடைவதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணையின் பிரகாரம் அரசாங்கத்தின் கடன் பெறும் கால எல்லை பெப்ரவரி 7 வரையும், அரசாங்கத்திற்கு நிதி வழங்குவதற்கு ஜனவரி 15 ஆம் திகதி வரைக்கும் அனுமதி கிடைத்துள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &