பரகஹதெனியவில் அல்ஹம்துளில்லாஹ் இம்முறை ஹஜ்ஜுப் பெருநாள் உழுஹியா எவ்வித தடங்கல்களோ சிக்கல்களோ இன்றி மூன்று ஜும்ஆ பள்ளிகளிலும் ஒருசிலர் தனிப்பட்ட முறையிலும் தமது கடனைகளை மிகவும் அமைதியான முறையில் நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இன்னும் சிலர் இன்று தமது உழுஹியா கடமையை நிறைவேற்றுகின்றனர். எனினும் நாளைய தினம் போய தினம் ஆகையால் நாளை உழுஹியா கடமையை நிறைவேற்றாது இன்றே கடமைகளை நிறைவு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கலகெதர போன்ற ஒருசில ஊர்களில் இம்முறை உழுஹியா கடமை நிறைவேற்றப்படவில்லை என்பது விஷேட அம்சமாகும்