BREAKING NEWS

Jun 18, 2013

இலங்கை அணி அரை இறுதிக்கு

சாம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதிக்கொண்டன. 

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளது. இதன்படி களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

இலங்கை அணி சார்பாக திரிமான்ன 57 ஓட்டங்களையும் ஜயவர்தன ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களையும் பெற்றனர். அவுஸ்திரேலியா தரப்பில் ேஜோன்சன் 3 விக்கெட்டுக்களும், மெக்கே, பால்க்னர், டொகார்ட்டி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 

இதையடுத்து 254 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி 42.3 ஓவரில் சகல விக்கெட்டுகளயும் இழந்து 233 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது. இதையடுத்து இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது. 

இதனால் இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் இந்திய அணியை இலங்கை எதிர்கொள்ளும். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &