Jun 18, 2013
ஆசிரியையை முழந்தாளிட வைத்த மாகாண சபை உறுப்பினர் ராஜினாமா
Posted by AliffAlerts on 07:06 in NL | Comments : 0
ஆசிரியையை முழந்தாளிடவைத்த வடமத்திய மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவை ராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் வடமேல் மாகாண சபையை எந்நேரத்திலும் கலைப்பதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி தீர்மானிக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடமேல் மாகாண சபையை கலைப்பதற்கு அந்த மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய விருப்பத்தை அக்கூட்டத்தின் போது தெரிவித்துள்ளனர். அத்துடன், ஆசிரியையை முழந்தாளிடவைத்த உறுப்பினரை ராஜினாமா செய்யுமாறு கோருவதற்கும் இக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதுடன் அடுத்த மாகாண சபைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலின் போது அவருக்கு இடம்கொடுப்பதில்லை என்ற தீர்மானமும் இந்த கூட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது.