தினந்தோறும் இந்த உலகில் பல புதுமைகள் நடந்து கொண்டேதான் இருக்கிறன. நாமூம் அந்த புதுமைகளை கண்டு வியந்து கொண்டுதான் இருக்கிறோம்.
அந்த வகையில் உலகின் தற்போதைய ஹாட் டாக் எது என்று கேட்டால் நீங்கள் அதிர்ந்து போய்விடுவீர்கள் சீனாவில் ஒரு தம்பதி ஐ போன் வாங்குவதற்காக தான் பெற்ற குழந்தையை விற்று ஐ போன் வாங்கி இருக்கிறார்கள்.
இதுவரை இந்த மாதிரி ஒரு சம்பவத்தை நிச்சயம் நீங்கள் கேள்விபட்டிருக்க மாட்டிர்கள் ஒரு போன் வாங்குவதற்காக பெற்ற குழந்தையை விற்றது நம்மை நிச்சயம் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.
இதற்கு முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே சீனாவில் ஐ போன் வாங்குவதற்குகாக தனது கிட்னியை விற்ற சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கலாம்.
தற்போது இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு ஒட்டுமொத்த உலகமும் அதிர்ச்சியில் இருக்கிறது நண்பரே, மேலும் சம்பந்தப்பட்ட பெற்றோரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.