BREAKING NEWS

Oct 7, 2013

உடன்பாடு மீறப்பட்டால் எதிர்க் கட்சிக்கு ஆதரவு


SLMC lankamuslim

கிழக்கு மாகாண சபை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸு க்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை மீறப்பட்டால், கட்சி எதிர்கட்சிக்கு ஆதரவளிக்கும் நிலை ஏற்படும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 7 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைத்தது.
இதன்போது இறுதி இரண்டரை வருடங்கள் முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிஸுக்கு வழங்கப்பட வேண்டும் என்று உடன்பாடு எட்டப்பட்டதுடன் அமைச்சுக்கள் தொடர்பிலும் உடன்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டன.
எனினும் தற்போது முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலமைச்சர் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாக ஹசன் அலி குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை. எனவே இந்தநிலைமை தொடருமானால் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கும் என்று ஹசன் அலி மேலும் எச்சரித்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &