BREAKING NEWS

Oct 7, 2013

பாணமவில் நிலநடுக்கம்

அம்பாறை, பாணமவில் 4.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

கடலுக்கடியில் 400 கிலோமீற்றர் தூரத்திலேயே இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் அந்த பணியகம் அறிவித்துள்ளது.

இன்று பிற்பகல் வேளையிலேயே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் நிலநடுக்க அபாயம் இருப்பதாக புவியியல் வல்லுநர் திசாநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டிருப்பதால் நிலநடுக்க அபாயம் இருப்பதாகவே புவியியல் வல்லுநர் திசாநாயக்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கை புவியியல் பேராசிரியர் சி.பி.திசாநாயக்க, இலங்கையின் கடல் பகுதி மற்றும் நில நடுக்கங்கள் பற்றி ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.

இலங்கைக்குரிய பூமி பகுதியில் சுமார் 500 முதல் 600 கிலோ மீற்றர் தூரத்தில் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் புதிய புவி அடுக்கு உருவாகி வருவதால் இந்த வெடிப்பு ஏற்பட்டு வருகிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &