மலேசியா நாட்டின் அரசியல் பிரமுகர் ஒருவரை தாக்கிய குற்றசாட்டின் பெயரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி கைது செய்யப்பட்டவர்களில் இருவர் இலங்கையர்கள் என மலேசிய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மலேசியாவின் பிடொர் பிரதேச தேர்தல் வேட்பாளர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி பிரமுகர் தமது வாகனத்தினை ஓட்டி செல்லும் போது அவரை இரண்டு கார்களில் வந்து வழிமறித்து மேற் படி இளைஞர்கள் அவரை சரமாரியாக தாக்கி தப்பி சென்றிருப்பதாக விசாரணைகளின் மூலம் அறியப்படுவதாக பெரக் பிரதேச காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது இவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.