இந்திய IPL தொடரில் தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் யூசுஃப் பதான் அந்த அணியின் விளம்பர உரிமையினை பெற்ற ‘Royal Stag’ என்ற மதுபானத்தின் லோகோவை அணிய மறுத்துள்ளார்.
அணியின் மற்ற வீரர்கள் “Royal Stag” லோகோவை அணியும் போது, யூசுப் மட்டும் மறுப்பதற்கு அவரது மதநம்பிக்கை தான் முக்கிய காரணம்.
இளம் பருவத்தில் பரோடாவில் உள்ள மசூதியில் வளர்ந்த இவர், இஸ்லாமிய நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.அவர் மதுபான லோகோவை அணியாமல் இருக்க கொல்கத்தா அணி நிர்வாகமும் அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே தென் ஆபிரிக்க வீரர் Hashim Amla, Imran Thahir, Buharuddeen அந்த நாட்டு அணிக்கு அனுசரணை செய்யும் மதுபான நிறுவனத்தின் லோகோவை தனது ஜெர்சியில் விளம்பரப்படுத்த மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.