BREAKING NEWS
Showing posts with label SP. Show all posts
Showing posts with label SP. Show all posts

Apr 3, 2015

அணிக்கு ஏழு பேர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி


பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்து நடாத்தும் அணிக்கு ஏழு பேர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நாளை மற்றும் நாளை மறுதினம் (சனி மற்றும் ஞாயிறு) பறகஹதெனிய தேசயிப் பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இப்போட்டித் தொடரில் வெற்றிபெறும் அணிக்கு க்லோபல்  கிண்ணத்துடன் 40000 ரூபா பணப்பரிசிலும் வழங்கப்படவுள்ளது. அத்துடன் இரண்டாமிடத்தைப் பெறும் அணிக்கு 20000 ரூபா பணப்ரிசிலுடன் கிண்ணமும்இ சிறந்த தொடர் வீரர் ஒழுக்கமான வீரர் சிறந்த கோல் காப்பாளர் அதிக கோல்களைப் பெற்ற வீரர் ஆகியோருக்கான பரிசில்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Aug 8, 2014

பறகஹதெனிய பாடசாலை மைதானத்தில் இருந்த மினி கோல் போஸ்ட்களை காணவில்லை


பறகஹதெனிய தேசியப் பாடசாலை விளையாட்டு மைதானத்திலிருந்த 4 மினி கோல் போஸ்ட்களை கடந்த இரண்டு வாரங்களாக காணவில்லை என எமக்கு தகவல் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

மாலை நேர பயிற்சிகளுக்காக பயன்படத்தப்படும் இந்த 4 மினி கோல்போஸ்ட்களும் நோன்பு காலத்தில் பயிற்சிகளில் ஈடுபடும் போது இருந்ததாகவும் பெருநாளைக்குப் பிறகு காணவில்லை என்றும் குறித்த நபர் எமக்கு தெரிவித்தார்.

இது பற்றி மேலதிக விபரங்கள் ஏதும் தெரிந்தவர்கள் தயவு செய்து இந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தகவல்களை வழங்கவும்.
0777654234

Jun 28, 2014

முதல் வெற்றியை அபாரமாக சுவீகரித்தது இலவன் ஸ்டார்ஸ்



இலங்கை காலப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்து நடாத்தப்படும் 2014 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தர (DIVISION II) உதைப்பந்தாட்டப் போட்டிகள் கடந்த வாரம் ஆரம்பானது.

அந்தவகையில் சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு உதைப்பந்தாட்ட சம்மேளன DIVISION II போட்டிகளில் பங்குபற்றும் வரத்தைப் பெற்றுக்கொண்ட பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் அணியினர் தமது முதல் போட்டியில் இன்று களமிறங்கினர்.

கேகாலை மாயா உதைப்பந்தாட்ட கழகத்துக்கு எதிராக இடம்பெற்ற இப்போட்டி குருநாகல் வெஹர உதைப்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் ஆரம்பம் முதலே வேகமாகவூம் விவேகமாகவூம் ஆடிய இலவன் ஸ்டார்ஸ் அணியினர் முதல் 5ஆவது நிமிடத்திலே தமது கோல் வேட்டையை ஆரம்பித்தனர். முதலரைப் பகுதி நிறைவூறும் போது 5 - 0 எனும் அடிப்படையில் முன்னிலை வகித்த பறகஹதெனிய இலவன் ஸடார்ஸ் அணியினர் முழு ஆட்ட நேர நிறைவின்போது 6-1 எனும் அடிப்படையில் அபார வெற்றியைப் பெற்றுக்கொண்டு தமது வெற்றிப் பயணத்தை மேலும் உறுதியூடன் முன்னெடுத்தனர்.

இலவன் ஸ்டார்ஸ் சார்பாக உஸ்மான் 3 கோல்களையூம் பைசல் 1 கோலையூம் சப்னி 1 ஒரு கோலையூம் சதாத் 1 கோலையூம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இலங்கை விளையாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்து நடாத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியின் அகில இலங்கை உதைப்பந்தாட்ட போட்டிகளில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ள பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் அணியினர் எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பு செல்ல இருக்கின்றமையூம் குறிப்பிடத்தக்கது.




Jun 7, 2014

ELEVEN STARS WON THE NWP CHAMPIONSHIP

வடமேல் மாகாண சாம்பியன் பட்டத்தை வென்றது பரகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் அணி 


விளையாட்டு அமைச்சினால் 2014ஆம் ஆண்டிற்காக ஏற்பாடு செய்து நடாத்தப்படும் விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சியின் உதைப்பந்தாட்டத் தொடரின் குருநாகல் மாவட்ட சாம்பியன்களான  இலவன் ஸ்டார்ஸ் அணி இன்று சிலாபத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட போட்டியில் பங்கேற்றது இதன்போது புத்தள மாவட்ட சாம்பியன்களான சிலாப உதைப்பந்தாட்ட அணியுடன் மோதியது. இப்போட்டியிலும்  தனது திறமையினை செவ்வனே வெளிப்படுத்தி தனது மாவட்டத்துக்கும் பிரதேசத்துக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளது. 
புத்தளம் மாவட்டத்துடன் இடம்பெற்ற போட்டியில் பெனால்டி முறையில் 5க்கு 3 என்ற அடிப்படையில் சிறந்த தொடர்வேற்றியை தனதாக்கிக்கொண்டது பரகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் அணி. 

அத்துடன் முதன்முறையாக இவ்வாறான போட்டித்தொடரில் வெற்றிபெற்று அகில இலங்கை போட்டிகளுக்கு இலவன் ஸ்டார்ஸ் அணி செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 



Jun 3, 2014

மீண்டும் KURUNEGALA DISTRICT CHAMPIONS: பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ்




மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ்

பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் குருநாகல் மாவட்ட சம்பியன்களாக மீண்டும் தொடரச்சியான தனது ஆதிக்கத்தை செலுத்தியவாறு முடிசூடினர் 

கடந்த ஞாயிற்றுக் கிழமை 2014ஆம் ஆண்டிற்காக விளையாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்து நடாத்தப்படும் மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டியின் குருநாகல் மாவட்ட விளையாட்டு நிகழச்சிகள் குருநாகல் மாலிகாப்பிட்டிய மைதானத்தில் இடம்பெற்றது.

குருநாகல் மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவூகளின் கீழ் வெற்றியீட்டி தகுதிபெற்றவர்கள் மாவட்டமட்ட போட்டிகளில் பங்குபுற்றினர்.

5 பிரதேச செயலாளர் பிரிவூகளிலும் வெற்றியீட்டிய 5 காலப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றியதுடன் இப்போட்டித்தொடரின் இறுதிப்போட்டிக்கு மாவத்தகம பிரதேச செயலாளர் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகமும் இலங்கை காலப்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 வீரர்களை உள்ளடக்கிய குருநாகல் மாவட்ட அணியூம் தகுதிபெற்றனர்.

இறுதிப்போட்டியின் முழு நேர நிறைவின்போது இரு அணிகளும் எவ்வித கோல்களையூம் பெற்றுக்கொள்ளாததனால் பெனல்ட்டி உதைகள் மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

இதன்போது பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் 5-2 எனும் அடிப்படையில் இலகுவான வெற்றியை சுவிகரித்துக்கொண்டு வடமேல் மாகாண போட்டிக்கு தகுதிபெற்றது. 

அத்துடன் தொடர்ந்தும் மூன்றாவது தடவையாக வெவ்வேறுபட்ட குருநாகல் மாவட்டமட்ட போட்டித் தொடர்களில் சம்பியன்களாக தமது ஆதிக்கத்தை குருநாகல் மாவட்டத்தினுள் தொடரந்தும் பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் நிலைநாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





May 24, 2014

ASHSHAMS PRE SCHOOL SPORTS MEET 2014


அஸ்ஸம்ஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை பறகஹதெனிய தேசியப் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக மாவத்தகம பிரதேச வடமேல் மாகாண சபை உறுப்பினர் அசோக பிரேமதாச மாவத்தகம பிரதேச சபை உறுப்பினர் எம் என் எம் றிபால் உட்பட பலர் கலந்துகொண்டதுடன் ஏராளமான பெற்றௌர் நலன் விரும்பிகளும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Mar 9, 2014

இனிதே நிறைவூற்ற சுதந்திரக் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி

இன்று இனிதே நிறைவூற்ற சுதந்திரக்கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி



பறகஹதெனிய ஃபோல்கள் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த சுதந்திரக் கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்று மாலை 6.30 மணியவில் குலியாப்பிட்டிய நவ சமகி கழகத்திற்கு சம்பியன் பட்டத்தை வழங்கியவாறு இனிதே கோலாகலமாக நிறைவூற்றது.

சுமார் 80 அணிகள் கலந்துகொண்ட இப்போட்டித்தொடரில் சம்பியன் பட்டத்தை குலியாப்பிட்டிய நவ சமகி கழகம் வென்றதுடன் அவர்களுக்கு 50000 ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டதுடன் இரண்டாமிடத்தை மாவத்தகம கெஷுவல் லைன் விளையாட்டுக் கழகம் வென்றதுடன் அவர்களுக்கு 20000 ரூபா பணப்பரிசிலும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டதுடன் மூன்றாமிடத்தை பறகஹதெனிய நிவ்ஷைன் விளையாட்டுக் கழகம் சுவீகரித்துக்கொண்டதுடன் அவர்களுக்கு 10000 ரூபா பணப்பரிசில் வழங்கப்பட்டது.

அத்துடன் சிறந்த தொடர் வீரர் மற்றும் இறுதிப்போட்டியின் சிறந்த வீரர் பரிசில்களை குலியாப்பிட்டிய நவ சமகி கழகம் சுவீகரத்துக்கொண்டதுடன் சிறந்த பந்துவீச்சாளர் விருதினை மாவத்தகம கெஷுவல் லைன் அணி பெற்றுக்கொண்டதுடன் சுப்பர் சிக்ஸஸ் விருதினை பறகஹதெனிய நிவ்ஷைன் கழகத்தின் டில்சாட் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. பார்வையாளர்கள் ஆதரவாளர்களால் மூழ்கடிக்கப்பட்டிருந்த இப'போட்டித் தொடர நீண்ட காலத்துக்குப் பிறகு பறகஹதெனியவில் ஏற்பாடுசெய்யப்பட்டிரந்த அதிசிறந்த போட்டித்தொடராகும். மேலும் இப்போட்டித் தொடரின் உடக அனுசரணையாளர்களாக AliffAlerts தொழிற்பட்டமையூம் குறிப்பிடத்தக்கது.








Mar 1, 2014

சமாதானக் கிண்ண மென் பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி 2014

      
சமாதானக் கிண்ண அணிக்கு ஆறு பேர் கொண்ட மென் பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி 2014

இலங்கையின் 66 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு போல்க்கன் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்து நடாத்தும்; அணிக்கு ஆறு பேர் கொண்ட மென் பந்த கிரிக்கட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 2014 மார்ச் 08 மற்றும் 09 ஆம் திகதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பறகஹதெனிய தேசியப் பாடசாலை மைதானத்தில் இடம்பெறுவதற்கான எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இப்போட்டித் தொடரில் வெற்றிபெறும் அணிக்கு சுதந்திரக் கிண்ணத்துடன்இ 50,

000 ரூபா பணப்பரிசிலும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 20,000 ரூபா பணப்பரிசிலும் மூன்றாம் இடத்தைப் பெறும் அணிக்கு ரூபா 10,000 பணப்பரிசிலும் சுற்றுத் தொடரின் சிறந்த வீரர் மற்றும் இறுதிப் போட்டியின் சிறந்த வீரர் ஆகியோருக்கான பரிசில்களும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்கள் மற்றும் பதிவூகளுக்காக 0773 461 943, 0777 112 617, 0722 030 812  எனும் தொலைபேசி இலக்கங்களினூடு தொடர்புகொள்ளவூம்.

         

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &