மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ்
பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் குருநாகல் மாவட்ட சம்பியன்களாக மீண்டும் தொடரச்சியான தனது ஆதிக்கத்தை செலுத்தியவாறு முடிசூடினர்
கடந்த ஞாயிற்றுக் கிழமை 2014ஆம் ஆண்டிற்காக விளையாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்து நடாத்தப்படும் மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டியின் குருநாகல் மாவட்ட விளையாட்டு நிகழச்சிகள் குருநாகல் மாலிகாப்பிட்டிய மைதானத்தில் இடம்பெற்றது.
குருநாகல் மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவூகளின் கீழ் வெற்றியீட்டி தகுதிபெற்றவர்கள் மாவட்டமட்ட போட்டிகளில் பங்குபுற்றினர்.
5 பிரதேச செயலாளர் பிரிவூகளிலும் வெற்றியீட்டிய 5 காலப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றியதுடன் இப்போட்டித்தொடரின் இறுதிப்போட்டிக்கு மாவத்தகம பிரதேச செயலாளர் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகமும் இலங்கை காலப்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 வீரர்களை உள்ளடக்கிய குருநாகல் மாவட்ட அணியூம் தகுதிபெற்றனர்.
இறுதிப்போட்டியின் முழு நேர நிறைவின்போது இரு அணிகளும் எவ்வித கோல்களையூம் பெற்றுக்கொள்ளாததனால் பெனல்ட்டி உதைகள் மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதன்போது பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் 5-2 எனும் அடிப்படையில் இலகுவான வெற்றியை சுவிகரித்துக்கொண்டு வடமேல் மாகாண போட்டிக்கு தகுதிபெற்றது.
அத்துடன் தொடர்ந்தும் மூன்றாவது தடவையாக வெவ்வேறுபட்ட குருநாகல் மாவட்டமட்ட போட்டித் தொடர்களில் சம்பியன்களாக தமது ஆதிக்கத்தை குருநாகல் மாவட்டத்தினுள் தொடரந்தும் பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் நிலைநாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


