யாழ்ப்பாணத்தில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆட்கள் அற்ற வேவு விமானமொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்.நகரிலுள்ள விடுதியொன்றின் மேற் கூரையிலிருந்து மீட்கப்பட்ட அந்த விமானம் தற்போது யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விடுதி நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட தகவலையடுத்தே இது மீட்கப்பட்டுள்ளது.
வேவு நடவடிக்கைகளிற்கு பயன்படுத்தப்படும் குறித்த வேவு விமானம் செயலிழந்து கீழே வீழ்ந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றுது. இந்த வேவு விமானம் எந்த நாட்டினது என இதுவரை அடையாளம் காணப்படாத போதும் மேலதிக தகவல்களிற்காக இலங்கை விமானப்படையினது உதவி நாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.