BREAKING NEWS

May 31, 2014

நடிகை மோனிகா இஸ்லாம் மதத்திற்கு...

பிரபல நடிகை மோனிகா இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து இவர் தன் பெயரை ரஹீமா என மாற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை எனவும் அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இந்த முடிவு வருத்தத்தைத் தந்தாலும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்தார்.

“பணத்திற்காகேவா காதலுக்காவோ நான் மதம் மாறவில்லை. நான் அப்படிப்பட்ட பெண் இல்லை. இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு பிடித்ததாலேயே நான் மதம் மாறினேன்” என அவர் இந்திய ஊடங்களுக்கு தெரிவித்தார்.

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த மோனிகா, அழகி, சிலந்தி உட்பட சுமார் 70 படங்களில் கதாநாயகி உள்ளிட்ட பல வேடங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ள இவரின் பெயரை மாற்றுவதில் உடன்பாடில்லை என குறிப்பிட்டுள்ளார். எனினும் தற்போது எம் ஜி ரஹீமா (மாருதி ராஜ் கிரேஸி ரஹீமா) என பெயர் மாற்றியுள்ளதாக அவர் கூறினார்.

“அத்துடன் எனது திருமணம் பற்றிய முறையான தகவல் உரிய நேரத்தில் உங்களுக்கு தெரிவிப்பேன். எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை துணையாக இருந்த என் அப்பாவிற்கு இந்த நேரத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என நடிகை மோனிகா மேலும் தெரிவித்தார்.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &