BREAKING NEWS

Mar 25, 2013

பிரான்சில் ஓரினச் சேர்க்கை திருமணம் சட்ட பூர்வமாகும் நிலை

பிரான்ஸ் நாட்டில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கும் மசோதா, அந்தநாட்டு செனட் சபையில் நிறைவேற்றப்படவுள்ளது.

ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்ட ரீதியாக அங்கீகரிக்கக் கூடாது என தெரிவித்து, இந்த புதிய சட்டத்திற்கு எதிராக ஓரினச்சேர்க்கை திருமணத்தை எதிர்க்கும் பிரான்ஸ் நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டமாக்கும் மசோதா பிரான்ஸ் நாட்டு செனட் சபையின் ஒப்புதலுக்கு அடுத்த மாதம் அந்த நாட்டு அரசு கொண்டுவரவுள்ள நிலையிலேயே, ஓரினச்சேர்க்கை திருமணத்தை எதிர்க்கும் பிரான்ஸ் நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் பிரான்சில் பாரிஸ் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றாலும், குறித்த மசோதா பிரான்ஸ் நாட்டு செனட் சபையில் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, அந்த நாட்டு அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &