BREAKING NEWS

Mar 25, 2013

அஜித்தின் அதிரடி முடிவு

அதிரடி பன்ச் வசனங்களும், கதாநாயகன் அறிமுகமாகும் போது வரும் கதாநாயகனை புகழ்ந்துபாடும் பன்ச் பாடல்களும் இனி தனது படங்களில் இருக்கக் கூடாது என, நடிகர் அஜித் தனது அடுத்த படங்களை இயக்குவுள்ள இயக்குனர்களிடம் தெரிவித்துள்ளாராம்.

இது என்ன முடிவு என்று பலரும் வியப்பாக பேசி வருகிறார்களாம்.

கதாநாயகர்கள் அனைவரும் கட்டாயமாக வேண்டும் என்று சொல்லும் மிக முக்கிய அம்சம் இனி தனது படத்தில் இருக்கக் கூடாது என ஏன் அஜித் நினைக்கிறார் என, முடிவின் ஆழம் தெரியாமல் பலர் சிந்தித்து வருகிறார்களாம்.

இன்று நேற்று வந்த சின்ன சின்ன நடிகர்கள் எல்லாம் பன்ச் வசனங்களை பேசி நடிப்பதால், திரையுலகின் மூத்த நடிகரான அஜித் அவற்றை தவிர்க்க நினைத்திருக்கக் கூடும் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

எது எப்படியோ,,, அஜித் எடுக்கும் அதிரடி முடிவுகளால் திரையுலகம் அதிருவது உண்மையே…

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &