BREAKING NEWS

Mar 25, 2013

ஐ.நா வழங்கிய வாகனங்கள் பறிமுதல்??

ஐக்கிய நாடுகள் சபை உணவுத் திட்டத்தின் கீழ் வன்னி மாவட்டத்திற்கென வழங்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வடமாகாண ஆளுநரே இவ்வாறு வாகனங்களை பைமுதல் செய்து தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளதாக தெரிய வருகிறது.

வன்னி பிரதேச பாடசாலைகளின் மேற்கொள்ளப்பட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவுத் திட்டப்பணிகளுக்காகவே இந்த வாகனங்கள் கல்வி அதிகாரிகளிடம் நேரடியாக வழங்கப்பட்டிருந்தன.

ஏற்கனவே இவ்வாறு ஒப்படைக்கப்படுகின்ற வாகனங்களை வாடா மாகாண ஆளுநர் திட்டமிட்டு தன்வசப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையிலேயே இந்த வாகனங்களை ஆளுநர் ஊடாக வழங்காமல் நேரடியா கல்வி அதிகாரிகளிடமே ஐக்கிய நாடுகள் சபை அனைத்து வாகனங்களிலும் பெயர் பொறிக்கப்பட்டு வழங்கப்பட்டதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும் ஆளுநரின் ஊடாக குறித்த வாகனங்கள் ஒப்படைக்கவில்லை என்பதற்காக அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய பணித்துள்ளதாக வன்னி கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &