நாட்டில் அண்மைக் காலங்களில் இருந்து பாரிய சர்ச்சைகளை பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்த-வரும் திவிநெகும அபிவிருத்தி திணைக்கள சட்டமூலம் இன்று (08) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
50 இலட்சம் மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய திவிநெகும சட்டமூலத்திற்கு எதிராக எவராயினும் செயற்படுவார்களாயின் அவர்கள் வறிய வர்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது என்றும் அரசு தெரிவிக்கிறது.
எனினும் திவிநெகும சட்டமூலத்திற்கு ஐதேக, ஜேவிபி, ததேகூ என்பன எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில் அரசாங்கத்தில் இணைந்துள்ள கூட்டுக் கட்சிகள் குறிப்பாக தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகள் திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
