நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் (Letospirosis) பரவும் அபாயம் நிலவுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஒரு வாரக் காலப்பகுதிக்குள் பொலன்நறுவை பிரதேசத்தில் மாத்திரம் 10 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பாதிவாகியுள்ளனர்.
தென்மாகாணத்திலுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் கழுத்துறை மாவட்டங்களில் அதிகளவானோர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதவிர களுத்தறை, கேகால்லை, குருணாகல, ரத்னபுர, மாத்தறை, காலி ஆகிய பிரதேசங்களும் இந்நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படியும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
