வடமேல் மாகாண சாம்பியன் பட்டத்தை வென்றது பரகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் அணி
விளையாட்டு அமைச்சினால் 2014ஆம் ஆண்டிற்காக ஏற்பாடு செய்து நடாத்தப்படும் விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சியின் உதைப்பந்தாட்டத் தொடரின் குருநாகல் மாவட்ட சாம்பியன்களான இலவன் ஸ்டார்ஸ் அணி இன்று சிலாபத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட போட்டியில் பங்கேற்றது இதன்போது புத்தள மாவட்ட சாம்பியன்களான சிலாப உதைப்பந்தாட்ட அணியுடன் மோதியது. இப்போட்டியிலும் தனது திறமையினை செவ்வனே வெளிப்படுத்தி தனது மாவட்டத்துக்கும் பிரதேசத்துக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளது.
புத்தளம் மாவட்டத்துடன் இடம்பெற்ற போட்டியில் பெனால்டி முறையில் 5க்கு 3 என்ற அடிப்படையில் சிறந்த தொடர்வேற்றியை தனதாக்கிக்கொண்டது பரகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் அணி.
அத்துடன் முதன்முறையாக இவ்வாறான போட்டித்தொடரில் வெற்றிபெற்று அகில இலங்கை போட்டிகளுக்கு இலவன் ஸ்டார்ஸ் அணி செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.