குருநாகல் மாவட்டத்திலுள்ள மாட்டிறைச்சிக் கடைகளை ஒரு மாத காலத்திற்கு மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மாடுகளுக்கு ஏற்பட்டு வரும் ஒருவித வைரஸ் நோய் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார பரிசோதகர் பணிமனை தெரிவித்துள்ளது.
மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நோய் காரணமாக மாடுகள் இறந்து வருகின்றன. அத்துடன் மாடுகளிடையே இந்நோய் வேகமாக பரவி வருவதன் காரணமாக கிருமி தொற்றுகளும் ஏற்படும் அபாயம் எதிர் நோக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் ஒரு மாத காலத்திற்கு குருநாகல் மாவட்டத்திலுள்ள மாட்டிறைச்சிக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த மார்ச் மாதமும் இப்பிரதேசத்திலுள்ள இறைச்சிக்கடைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.