
இலங்கை காலப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்து நடாத்தப்படும் 2014 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தர (DIVISION II) உதைப்பந்தாட்டப் போட்டிகள் கடந்த வாரம் ஆரம்பானது.
அந்தவகையில் சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு உதைப்பந்தாட்ட சம்மேளன DIVISION II போட்டிகளில் பங்குபற்றும் வரத்தைப் பெற்றுக்கொண்ட பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் அணியினர் தமது முதல் போட்டியில் இன்று களமிறங்கினர்.
கேகாலை மாயா உதைப்பந்தாட்ட கழகத்துக்கு எதிராக இடம்பெற்ற இப்போட்டி குருநாகல் வெஹர உதைப்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் ஆரம்பம் முதலே வேகமாகவூம் விவேகமாகவூம் ஆடிய இலவன் ஸ்டார்ஸ் அணியினர் முதல் 5ஆவது நிமிடத்திலே தமது கோல் வேட்டையை ஆரம்பித்தனர். முதலரைப் பகுதி நிறைவூறும் போது 5 - 0 எனும் அடிப்படையில் முன்னிலை வகித்த பறகஹதெனிய இலவன் ஸடார்ஸ் அணியினர் முழு ஆட்ட நேர நிறைவின்போது 6-1 எனும் அடிப்படையில் அபார வெற்றியைப் பெற்றுக்கொண்டு தமது வெற்றிப் பயணத்தை மேலும் உறுதியூடன் முன்னெடுத்தனர்.
இலவன் ஸ்டார்ஸ் சார்பாக உஸ்மான் 3 கோல்களையூம் பைசல் 1 கோலையூம் சப்னி 1 ஒரு கோலையூம் சதாத் 1 கோலையூம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இலங்கை விளையாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்து நடாத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியின் அகில இலங்கை உதைப்பந்தாட்ட போட்டிகளில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ள பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் அணியினர் எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பு செல்ல இருக்கின்றமையூம் குறிப்பிடத்தக்கது.
