
பறகஹதெனிய ஃபோல்கள் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த சுதந்திரக் கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்று மாலை 6.30 மணியவில் குலியாப்பிட்டிய நவ சமகி கழகத்திற்கு சம்பியன் பட்டத்தை வழங்கியவாறு இனிதே கோலாகலமாக நிறைவூற்றது.
சுமார் 80 அணிகள் கலந்துகொண்ட இப்போட்டித்தொடரில் சம்பியன் பட்டத்தை குலியாப்பிட்டிய நவ சமகி கழகம் வென்றதுடன் அவர்களுக்கு 50000 ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டதுடன் இரண்டாமிடத்தை மாவத்தகம கெஷுவல் லைன் விளையாட்டுக் கழகம் வென்றதுடன் அவர்களுக்கு 20000 ரூபா பணப்பரிசிலும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டதுடன் மூன்றாமிடத்தை பறகஹதெனிய நிவ்ஷைன் விளையாட்டுக் கழகம் சுவீகரித்துக்கொண்டதுடன் அவர்களுக்கு 10000 ரூபா பணப்பரிசில் வழங்கப்பட்டது.
அத்துடன் சிறந்த தொடர் வீரர் மற்றும் இறுதிப்போட்டியின் சிறந்த வீரர் பரிசில்களை குலியாப்பிட்டிய நவ சமகி கழகம் சுவீகரத்துக்கொண்டதுடன் சிறந்த பந்துவீச்சாளர் விருதினை மாவத்தகம கெஷுவல் லைன் அணி பெற்றுக்கொண்டதுடன் சுப்பர் சிக்ஸஸ் விருதினை பறகஹதெனிய நிவ்ஷைன் கழகத்தின் டில்சாட் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. பார்வையாளர்கள் ஆதரவாளர்களால் மூழ்கடிக்கப்பட்டிருந்த இப'போட்டித் தொடர நீண்ட காலத்துக்குப் பிறகு பறகஹதெனியவில் ஏற்பாடுசெய்யப்பட்டிரந்த அதிசிறந்த போட்டித்தொடராகும். மேலும் இப்போட்டித் தொடரின் உடக அனுசரணையாளர்களாக AliffAlerts தொழிற்பட்டமையூம் குறிப்பிடத்தக்கது.