இலங்கை கிரிக்கெட் வீரர் டி.எம்.டில்சான் தமது குழந்தையை கடத்த முற்படுவதாக அவரது முன்னாள் மனைவி காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
டில்சானும் அவரது மனைவியும் கடந்த வருடம் விவாகரத்து செய்து கொண்டனர்.
இந்த நிலையில் டில்சானின் மகனை சனி, ஞாயிறு மற்றும் பௌர்ணமி தினங்களில் பார்ப்பதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்படடிருந்தது.
எனினும் நேற்று சனிக்கிழமை டில்சான் தமது மகனை கடத்த முற்பட்டதாக தெரிவித்து அவரது மனைவி காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.