BREAKING NEWS
Showing posts with label IS. Show all posts
Showing posts with label IS. Show all posts

Nov 22, 2015

சிறப்பாக நடந்து முடிந்த சிறப்பு பயான் நிகழ்ச்சி....



சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் விஷேட பயான் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் நவம்பர் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக் கிழமை இரவு அல்லாஹ்வின் உதவியால் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வில் அல் ஜுபைல் தஃவா நிலைய அழைப்பாளர் அஷ்ஷெய்க் யாசிர் பிர்தவ்ஸி அவர்கள் "கணவனின் கடமைகள், உரிமைகள்" எனும் தலைப்பில் மிகச் சிறந்த முறையில் உரை நிகழ்தினார். அல்லாஹ் அவரின் அறிவை மென்மேலும் வளரச் செய்வானாக! 

ஆண்கள், பெண்கள், சிறுவார்கள் என கிட்டத்தட்ட 90 பேர் வரை கலந்து கொண்டு பிரயோசனமடைந்தனர். பயான் முடிவில் பேசப்பட்ட தலைப்பில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. ஈட்ரில் நிகழ்சிகள் இராப்போசனத்துடன் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்த மற்றும் அனைத்து வகைகளிலும் எமக்கு உதவிய அனைத்து சகோதரர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். ஜஸாகுமுல்லாஹு ஹைரன்.





Oct 26, 2015

சிங்கள மொழியில் அல் குர்ஆன் மொழிபெயர்ப்பு


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துனையால் பறகஹதெனிய ஜமாஅத் அன்ஸார் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் மற்றும் ஒரு வெளியீடாக சிங்கள மொழியிலான அல்குர்ஆன் மொழியாக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். தரமான முறையில் சிறந்த அறிஞர் குழாத்தின் மூலமாக மேற்கொள்ளப் பட்டிருக்கும் இப்பணி உண்மையில் இலங்கை திருநாட்டின் பெரும்பான்மை இன மக்கள் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு வழி சமைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முக்கிய கலைச் சொற்களுக்கான விளக்கம், மாற்று மதத்தவர்கள் புரிந்து கொள்ளும் விதமான அறிமுகக் குறிப்பு என இதன் சிறப்பம்சங்களின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது. சிங்களத்தை தாய் மொழியாகக் கொண்ட மக்களுக்கு மாத்திரமல்ல சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் எமது சமூகத்தை சார்ந்த மாணவச் செல்வங்களுக்கும் பெரும் பயனாக இருக்கும் என நம்புகின்றோம்.

கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழ் மொழியில் மிகச் சிறந்த அல்குர்ஆன் மொழியாக்கம் ஜமாஅத் அன்ஸார் ஸுன்னா அல்முஹம்மதிய்யாவினால் வெளியிடப்பட்டு அது சமூகத்தில் பெரும் அங்கீகாரம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பாரிய பணியை செய்த மற்றும் இவ் வெளியீடு வெளிவர அனைத்து வகையிலும் உதவிய அனைவருக்கும் அருள் பாளிப்பானாக!


எம். றிஸ்கான் முஸ்தீன் (மதனி)

Oct 22, 2015

சவுதி அரேபிய அரசாங்கம் 30,000 குர்ஆன் பிரதிகள் மற்றும் கிதாபுகள் அன்பளிப்பு


பரகஹதெனியவை பிறப்பிடமாகவும் சவுதி அரேபியா பிரஜாவுரிமையைப்பெற்று சவுதி அரேபியாவை வசிப்பிடமாகவும்கொண்ட அஷ்ஷேக் ரியால் சீலாணி (சாதிக் ஹாஜியார்) அவர்கள்
சவுதி அரேபிய குர்ஆன் மற்றும் கிதாபுகள் புத்தகங்கள் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் சவுதி அரசாங்கத்திடமிருந்து அன்பளிப்பாக பெறப்பட்ட சுமார் 30,000 அல்குர்ஆன் மற்றும் பெறுமதி வாய்ந்த கிதாபுகள் இலங்கையில் உள்ள மத்ரஸாக்கள், அநாதை நிலையங்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களுக்கு விநியோகிக்கும்  நிகழ்வு 20/10/2015 ஜம்ய்யதுஸ் ஸபாப் நிறுவன கேட்போர் கூடத்தில் மெளலவி  எம்.எஸ்.எம் தாஸிம் தலைமையில் இடம் பெற்றது.

இதில் சவுதி அரேபிய பிரதிநிதி, சவுதி அரசாங்கத்திடமிருந்து அல்குர்ஆன் பிரதிகளை பெற்றுத்தந்த  சவுதி அரேபிய குர்ஆன் மற்றும் கிதாபுகள் புத்தகங்கள் பிரிவின் தலைவர்  ஸாதிக் ஹாஜியார், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பிரதிநிதிகள் , முஸ்லிம் கலாசார திணைக்கள பிரதிப்பணிப்பாளர் மற்றும் நிறுவன தலைவர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்
இதில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.








Oct 17, 2015

மோஸ்கோவில் அஷ்ஷெய்க் மாஹிர் அல்முஅய்கிலி குத்பா பிரசங்கம்.

ரஷ்யா தலைநகர் மோஸ்கோவில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசலில் மக்கா ஹரம் ஷரீபின் இமாம் அஷ்ஷெய்க் மாஹிர் அல்முஅய்கிலி இன்றைய தினம் (16-10-2015) குத்பா பிரசங்கம் செய்தார்.

மோஸ்கோவில் நடைபெறும் 16 வது உலகலாவிய அல் குர்ஆன் போட்டியில் நடுவராக கலந்து கொள்ளும் முகமாக கடந்த 11-10-2015 அன்று ரஷ்யா நோக்கி ஷெய்க் மாஹிர் அவர்கள் சென்றமை குறிப்பிடத்தக்கது.

1904 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மோஸ்கோ பெரிய பள்ளி வாசல் 170 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரஷ்ய அதிபர் விலாதிமீர் பூட்டீன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

செய்தி மூலம்: ஸபக் செய்திச் சேவை

தமிழ் மொழியில் றிஸ்கான் முஸ்தீன் மதனி

Oct 11, 2015

அஷ்ஷெய்க் முஹம்மது ரியால் ஸீலானி (ஸாதிக் ஹாஜியார்) பறகஹதெனிய மண்ணின் இன்னுமொரு மறக்க முடியாத ஆளுமை....


 சவுதி அரேபியாவில் குடியுரிமை பெற்று மக்கா புனித ஹரம் ஷரீபிலே அல்குர்ஆன் மற்றும் புத்தகங்கள் தொடர்பான பிரிவுக்கு தலைவராக செயற்படும் ஒரே இலங்கையர் என்பது எம்மனைவருக்கும் பெருமையான விடயமாகும். 
அஷ்ஷெய்க் முஹம்மது ரியால் ஸீலானி (ஸாதிக் ஹாஜியார்) பறகஹதெனிய மண்ணின் இன்னுமொரு மறக்க முடியாத ஆளுமை.... சவுதி அரேபியாவில் குடியுரிமை பெற்று மக்கா புனித ஹரம் ஷரீபிலே அல்குர்ஆன் மற்றும் புத்தகங்கள் தொடர்பான பிரிவுக்கு தலைவராக செயற்படும் ஒரே இலங்கையர் என்பது எம்மனைவருக்கும் பெருமையான விடயமாகும். 

இலங்கை திருநாட்டில் ஏகத்துவக் கொள்கையை நிருவனமயப்படுத்தி, ஜமாஅத் அன்ஸார் ஸுன்னா அல் முஹம்மதிய்யாவை பறகஹதெனியவை தலைமையமாக கொண்டு இலங்கையின் பல பகங்களிலும் அதன் கிளைகளை நிருவிய அல்லாமா தர்வேஷ் ஹாஜியாரின் சிந்தனையில் மக்கமா நகருக்கு சிறிய வயதிலே மார்க்க கல்வியை கற்றுக் கொள்வதாற்காக சென்ற ஷெய்க் ஸாதிக் ஹாஜியார் தர்வேஷ் ஹாஜியாரின் மரைவுக்கு பின் அவருக்கு அடுத்த படியாக சவுதி குடியுரிமையை பெற்று கொண்டு கடந்த பல தசாப்தங்களாக மக்கா ஹரம் ஷரீபில் பல்வேறு உயர் பதவிகளில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்மையில் ஷெக் அவர்கள் அல் அரபிய்யா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தமது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அல்குர்ஆன் மற்றும் புத்தக பிரிவின் சேவைகளை தெளிவு படுத்தும் போது......
(Video Link)

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் சேவைகளை பொருந்திக் கொண்டு நற்கூலி வழங்கிடவும் அவர்களின் இதர சமூகப் பணிகள் தொடரவும் பிரார்தனை செய்வோம்.

By: As- Sheikh M.Riskhan Musteen (Madani) 







Oct 9, 2015

மாதாந்த பயான் நிகழ்ச்சி & பரிசளிப்பு நிகழ்வு



சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் பயான் நிகழ்ச்சி அல்லாஹ்வின் பேரருளால் மிகவும் வெற்றிகரமாக (08-10-2015) நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்வில் அல் கப்ஜி தஃவா நிலைய அழைப்பாளர் அஷ்ஷெய்க் றிஸ்கான் முஸ்தீன் மதனி அவர்கள் "முஹர்ரம் மாதத்தின் சிறப்புக்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பயான் நிகழ்சி முடிவில் கேள்வி - பதில் நிகழ்சி நடைபெற்றது. சரியான பதில் அளித்த ஆண்கள் பிரிவில் 6 பேருக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் எமது தஃவா நிலையத்தில் வாராந்தம் இடம் பெரும் இஸ்லாமிய பாடத்திட்டத்திற்கான பரீட்ச்சையில் சிறந்த புள்ளிகளை பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

01 Seyed Masood 94
02 H. Jainudeen 93
03 Mohamed Anas 89
04 Mohamed Ferose 83  (Paragahadeniya)
05 Abdul Hameed 81
06 Sadiq Basha 81
07 M. Reffai Thullah 81
08 Mohamed Jakariya 77
09 Satham Husain 76
10 Fayaz Mohammed 72
11 Naseer Husain 71
12 Rasmy Mahruf 66
13 Mohamed Mihlar 63
14 M.M Rifkan 61 (Paragahadeniya)

பரிசு பெற்றவர்களில் இரண்டு சகோதரர்கள் எமது  (Paragahadeniya) மண்ணைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்.

பங்குபற்றிய அனைவருக்கும் இராப் போசனம் தஃவா நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வு வெற்றி பெற அனைத்து வகையிலும் உதவிய அனைத்து சகோதரர்களையும் இங்கு நாம் மிக நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். ஜஸாக்குமுல்லாஹு ஹைரன்.

அல் கப்ஜி தஃவா நிலையம்,
தமிழ் மற்றும் சிங்கள பிரிவு.




















Oct 6, 2015

பறகஹதெனிய பிரதேசத்தில் மீண்டும் எழுச்சி பெறும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் தஃவா நடவடிக்கைகள்......

பறகஹதெனிய பிரதேசத்தில் மீண்டும் எழுச்சி பெறும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் தஃவா நடவடிக்கைகள்......

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெறும் கிருபையினால் மீண்டும் எமது சொந்த மண்ணில் தஃவா நடவடிக்கைகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

மதீனா பல்கலையில் கலாநிதி பட்டம் பெற்ற எமது மண்ணின் மைந்தன் டாக்டர் அம்ஜத் ராஸிக் மதனி அவர்கள் பிரதி ஞாயிரு தோரும் இஷா தொழுகைத் தொடர்ந்து இஸ்லாமிய கொள்கை விளக்கம் (அகீதா) மற்றும் ஹதீஸ் பாடநெறியை பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளியில் நடாத்தி வருகின்றார். அல்ஹம்துலில்லாஹ்.

பொதுவாக எல்லா மக்களுக்குமாக நடைபெறும் இந்த பாடநெறியுடன் இன்ஷா அல்லாஹ் விரைவில் இளைஞர்களுக்கு விஷேட வகுப்பு ஒன்றையும் ஆரம்பிக்க உள்ளதாக அஷ்ஷைக் அம்ஜத் எம்மிடம் தெரிவித்தார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பணிகளை பொருந்திக் கொண்டு பூரணமான கூலியை இந்நிகழ்வுகளில் அர்பனிப்புடன் ஈடுபடும் எல்லோருக்கும் வழங்க வேண்டும் என துஆ செய்து கொள்கின்றோம்.

Sep 9, 2015

அன்றாட வாழ்க்கையின் திட்டமிடலும் ஒழுங்கான முகாமைத்துவமும்

By: AsSheikh Inamullah Masihudeen

காலையில் எழுந்தவுடன் திட்டமிடல் : 

சுபஹு தொழுதுவிட்டு, அல்-குரானை ஒதுவது, திக்ரு அவ்ராதுகளை ஓதுவது என ஆன்மீக கடமைகளை செய்து அன்றைய தினத்தை அருள் நிறைந்ததாக ஆரம்பம் செய்தல் வேண்டும்.

அன்றைய தினம் நாம் செய்ய வேண்டிய கடமைகள், நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள், சந்திக்க வேண்டியவர்கள், சாதிக்க வேண்டியவைகள் என்பவற்றை கால நேர வரையறைகளோடு திட்டமிட்டுக் கொள்ளுதல் அவசியமாகும். 

படுக்கைக்கு செல்லுமுன் சுய விசாரணை :

அதே போன்று அன்றைய நாள் நிறைவில் படுக்கைக்குச் செல்லு முன்னும் ஒருமுறை நாம் திருப்திகரமாக, ஆக்கபூர்வமாக அந்த தினத்தைக் கழித்தோமா, இல்லாவிட்டால், ஏன், எப்படி என்று சிறியதொரு மீட்டலை செய்து கொண்டு, நாளைய பொழுதை எவ்வாறு கழிப்பது என்ற திட்டமிடலை செய்து கொண்டு இரை தியானங்களை செய்து கொண்டு நித்திரைக்கு செல்லுதல் வேண்டும்.

திட்டமிடலும் நேர முகாமைத்துவமும்:

திட்டமிடலும் நேர முகாமைத்துவமும் எமது வாழ்வில் மிகவும் முக்கியமான அம்சங்களாகும், அப்பொழுதுதான் முதன்மைப் படுத்த வேண்டிய அம்சங்கள், தவிர்க்கப்பட வேண்டிய விடயங்கள், எமது கடமைகள், பொறுப்புக்களில் இருந்து எம்மை பராக்காக்குகின்ற அம்சங்கள் குறித்து முடிவெடுக்கின்ற திறன் எம்மிடம் வளரும்.

கடமைகளை காலம் தாழ்த்ததிருத்தல் :

கல்வியாயினும், தொழில் முயற்சிகளாயினும், ஏனைய சமூகம்,தேசம் சார்ந்த சேவைகளாயினும் அவற்றை இன்றே செய்யவும், நன்றே செய்யவும் எம்மை நாம் வழக்கப் படுத்திக் கொள்ளும் பொழுது எமது ஒவ்வொரு பொழுதும் அர்த்தமுள்ளதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் அமையும்.

காலம் கடந்த கைசேதம் வேண்டாம்:

மனம் போன போக்கில், அல்லது உலகம் போகிற போக்கில் குறிப்பாக நண்பர்கள் போகிற போக்கில் என வாழ்ந்து, எமது ஆன்மீக வாழ்வு, அறிவு தேடல்கள், வாழ்வாதார முயற்சிகள், குடும்ப சமூக கடமைகள், நட்புறவுகள், சமூக ஊடக பாவனைகள், எல்லாவற்றையும் மிகச் சரியான திட்டமிடலில் மேற்கொள்ளத் தவறின் காலம் கடந்து நாம் கைசேதப் படுவது நிச்சயம்.

குறிப்பு : சிறுவர்களை குழந்தைகளை சிறுவயதிலிருந்தே ஒரு வாழ்வியல் ஒழுங்கில் பராமரித்தல் வேண்டும், அறிவுரைகளை உபதேசங்களை குறைத்து அவர்களுடன்  அவர்களோடு துணையாக நின்று அந்த ஒழுங்கில் அவர்களை வழக்கப்படுத்தி விடுதல் வேண்டும்.

அருளும் பொருளும் ஆன்மீகமும் ஆரோக்கியமும் என எல்லா வளமும் நிறைவாகப் பெற்று வாழ்க வளமுடன்.!
 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &