BREAKING NEWS

Nov 22, 2015

சிறப்பாக நடந்து முடிந்த சிறப்பு பயான் நிகழ்ச்சி....



சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் விஷேட பயான் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் நவம்பர் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக் கிழமை இரவு அல்லாஹ்வின் உதவியால் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வில் அல் ஜுபைல் தஃவா நிலைய அழைப்பாளர் அஷ்ஷெய்க் யாசிர் பிர்தவ்ஸி அவர்கள் "கணவனின் கடமைகள், உரிமைகள்" எனும் தலைப்பில் மிகச் சிறந்த முறையில் உரை நிகழ்தினார். அல்லாஹ் அவரின் அறிவை மென்மேலும் வளரச் செய்வானாக! 

ஆண்கள், பெண்கள், சிறுவார்கள் என கிட்டத்தட்ட 90 பேர் வரை கலந்து கொண்டு பிரயோசனமடைந்தனர். பயான் முடிவில் பேசப்பட்ட தலைப்பில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. ஈட்ரில் நிகழ்சிகள் இராப்போசனத்துடன் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்த மற்றும் அனைத்து வகைகளிலும் எமக்கு உதவிய அனைத்து சகோதரர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். ஜஸாகுமுல்லாஹு ஹைரன்.





Oct 28, 2015

க.பொ.த உயர்தர பரீட்ச்சையில் தோற்றியவர்களுக்கு


நடந்து முடிந்த உயர்தர பரீட்ச்சை பெறுபேறுகளின் படி பல்கலை கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்கான அனுமதிச் சான்றிதழ் அண்மையில் கிடைக்கபெற்றிருக்கும். இதன்படி தெரிவான மாணவர்களுக்கு முதற் கண் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கை பல்கலைக்கழகத்துக்கான தெரிவானது மிகவும் போட்டி மிக்கது. ஆதலால் சித்தியடைந்த அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகம் நுழைவது கடினம். இவ்வாறான மாணவர்களுக்கு அரசு, அவர்கள் உயர் கல்வியை தொடர வேறு பலவழிகளை அமைத்துக் கொடுத்து வருகின்றது.
இதன்படி பௌதீக விஞ்ஞானப் (கணிதப்) பிரிவில் உயர்தர பரீட்ச்சையில் தோற்றிய மாணவர்களுக்கு உயர்கல்வியை மேற்கொள்வதற்கான சில அரச கல்வி நிறுவங்கள் ( Government Institutes for Higher Studies )  ..

1.       NDT: National Diploma in Technology , இது மொரட்டுவ பல்கலைக் கழகத்துடன் இணைந்தாக காணப்படுகின்றது. மேலதிக விபரங்களுக்கு:    http://www.mrt.ac.lk/itum/ 

2.       NDES: National Diploma in Engineering Science, இந்த கற்கைநெறியை Institute of Engineering Technology இனால் வழங்குகின்றது. இது கட்டுநாயக்காவில் காணபடுகின்றது. மேலதிக விபரங்களுக்கு:   http://www.iet.edu.lk/  

3.       Open University of Sri Lanka, இலங்கையில் இது பல மாவட்டங்களிலும் அமையப் பெற்றுள்ளது. தலைமைப் பல்கலைக்கழகம் நாவலயில் காணபடுகின்றது. மேலதிக விபரங்களுக்கு:    http://www.ou.ac.lk/home/  , www.ou.ac.lk/eng/

4.       HNDE: Higher National in Diploma in Engineering, இதுவும் நாட்டின் பல பகுதிகளில் காணபடுகின்றது. மேலதிக விபரங்களுக்கு:    http://www.hndelk.com/p/Home/

5.       University of Vocational Technology, மேலதிக விபரம் அறிய:  http://www.univotec.ac.lk/   

6.       Vocational Training Center, மேலதிக விபரம் அறிய:  http://www.vtasl.gov.lk/# , http://www.vtasl.gov.lk/nvq5ict.html , http://www.vtasl.gov.lk/vta/QS.html , http://www.vtasl.gov.lk/cisco.html

7.       Technical Colleges, இலங்கையில் சுமார் 40 தொழில்நுட்ப கல்லூரிகள் காணபடுகின்றது.இவற்றின் பெயர் விபரம் அறிய: https://en.wikipedia.org/wiki/Technical_College_(Sri_Lanka), மேலதிக விபரம் அறிய கடந்த ஜூன் மாதம் வெளியான அரச வர்த்தமானி  http://documents.gov.lk/gazette/2015/PDF/Jun/05Jun2015/I-IIA(E)2015.06.05.pdf#sthash.QWCLLYCz.dpuf  

8.       SLIATE: Sri Lanka Institute of Advanced Technological Education, மேலதிக விபரம் அறிய:  http://www.mohe.gov.lk/index.php/en/universities-and-institutes/universities-under-the-ministry-of-higher-education/sri-lanka-institute-of-advanced-technoligical-education-sliate   

9.       SLIIT:  Sri Lanka Institute of Information Technology, மேலதிக விபரம் அறிய: http://www.sliit.lk/#  

மேலே கூறப்பட்டுள்ள கல்வி நிறுவங்களில் சிலவற்றின் அனுமதிக் காலம் முடிவடைந்திருந்தாலும், வருகின்ற காலங்களில் இது உதவும் என நம்புகிறேன்.  
இவைகள் மாணவர்களுக்கு இன்ஜினீரிங் (Engineering) பிரிவில் சிறந்த தொழில் சார் கல்வியை ( Industry based ) வழங்கி வருகின்றது. மேற்சொன்ன சில நிறுவனங்களின் பாடத்திட்டத்தில் Training சேர்த்தே காணபடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Diploma முடித்தவர்கள் திறந்த பல்கலைக்கழகத்தில் (Open University), Degree இணை பூர்த்தி செய்ய முடியும்.
 
குறிப்பு: இலங்கை பல்கலைக்கழகங்களில் பல நூறு கற்கைநெறிகள் போதிக்கப் படுகின்ற போதிலும் எமது மாணவர்கள் ஒரு சிலவற்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்கின்றனர்.

-- 
தொகுப்பு: Ashekh Ashkar Farook Salafy

Oct 26, 2015

சிங்கள மொழியில் அல் குர்ஆன் மொழிபெயர்ப்பு


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துனையால் பறகஹதெனிய ஜமாஅத் அன்ஸார் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் மற்றும் ஒரு வெளியீடாக சிங்கள மொழியிலான அல்குர்ஆன் மொழியாக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். தரமான முறையில் சிறந்த அறிஞர் குழாத்தின் மூலமாக மேற்கொள்ளப் பட்டிருக்கும் இப்பணி உண்மையில் இலங்கை திருநாட்டின் பெரும்பான்மை இன மக்கள் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு வழி சமைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முக்கிய கலைச் சொற்களுக்கான விளக்கம், மாற்று மதத்தவர்கள் புரிந்து கொள்ளும் விதமான அறிமுகக் குறிப்பு என இதன் சிறப்பம்சங்களின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது. சிங்களத்தை தாய் மொழியாகக் கொண்ட மக்களுக்கு மாத்திரமல்ல சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் எமது சமூகத்தை சார்ந்த மாணவச் செல்வங்களுக்கும் பெரும் பயனாக இருக்கும் என நம்புகின்றோம்.

கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழ் மொழியில் மிகச் சிறந்த அல்குர்ஆன் மொழியாக்கம் ஜமாஅத் அன்ஸார் ஸுன்னா அல்முஹம்மதிய்யாவினால் வெளியிடப்பட்டு அது சமூகத்தில் பெரும் அங்கீகாரம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பாரிய பணியை செய்த மற்றும் இவ் வெளியீடு வெளிவர அனைத்து வகையிலும் உதவிய அனைவருக்கும் அருள் பாளிப்பானாக!


எம். றிஸ்கான் முஸ்தீன் (மதனி)

Oct 22, 2015

சவுதி அரேபிய அரசாங்கம் 30,000 குர்ஆன் பிரதிகள் மற்றும் கிதாபுகள் அன்பளிப்பு


பரகஹதெனியவை பிறப்பிடமாகவும் சவுதி அரேபியா பிரஜாவுரிமையைப்பெற்று சவுதி அரேபியாவை வசிப்பிடமாகவும்கொண்ட அஷ்ஷேக் ரியால் சீலாணி (சாதிக் ஹாஜியார்) அவர்கள்
சவுதி அரேபிய குர்ஆன் மற்றும் கிதாபுகள் புத்தகங்கள் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் சவுதி அரசாங்கத்திடமிருந்து அன்பளிப்பாக பெறப்பட்ட சுமார் 30,000 அல்குர்ஆன் மற்றும் பெறுமதி வாய்ந்த கிதாபுகள் இலங்கையில் உள்ள மத்ரஸாக்கள், அநாதை நிலையங்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களுக்கு விநியோகிக்கும்  நிகழ்வு 20/10/2015 ஜம்ய்யதுஸ் ஸபாப் நிறுவன கேட்போர் கூடத்தில் மெளலவி  எம்.எஸ்.எம் தாஸிம் தலைமையில் இடம் பெற்றது.

இதில் சவுதி அரேபிய பிரதிநிதி, சவுதி அரசாங்கத்திடமிருந்து அல்குர்ஆன் பிரதிகளை பெற்றுத்தந்த  சவுதி அரேபிய குர்ஆன் மற்றும் கிதாபுகள் புத்தகங்கள் பிரிவின் தலைவர்  ஸாதிக் ஹாஜியார், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பிரதிநிதிகள் , முஸ்லிம் கலாசார திணைக்கள பிரதிப்பணிப்பாளர் மற்றும் நிறுவன தலைவர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்
இதில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.








Oct 21, 2015

பறகஹதெனிய மறக்க முடியாத இன்னுமொரு ஆளுமை எமது மண்ணின் மைந்தன் வை.எல்.எம் ஸவாஹிர் சேர்.



எல்லோராலும் அறியப்பட்ட வை.எல்.எம் ஸவாஹிர் சேர் பறகஹதெனிய தேசிய பாடசாலையின் பழைய மாணவர் பின்னர் அதே பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றி தனது சமூகப் பணியை துவங்கினார். தொடர்ந்து இலங்கை வெளிநாட்டு சேவையில் தன்னை இணைத்துக் கொண்டு அதில் பல்வேறு உயர் பதவிகளை அடைந்து பங்லாதேஷ் மற்றும் ஈரான் என பல்வேறு நாடுகளில் இலங்கை உயர் இஸ்தானிகராக பணியாற்றினார்.

மிகவும் சாதாரனமாக எல்லேருடனும் நடந்து கொள்ளும்இவர்களின் உயர் பண்பு எத்தனையோ உயர் பதவிகளில் இருக்கும் மமதை பிடித்தவர்களுக்கு மிகப் பெரும் எடுத்துக் காட்டாகும். இவர்களின் சேவையை தொடர்ந்து எமது மக்களுக்கு வழங்க நினைத்த எல்லாம் வல்ல அல்லாஹ் இன்றைய தினம் இலங்கை பொலிஸ் ஆணைக்குழு வின் உறுப்பினர் என்ற உயர் பதவியை வழங்கியுள்ளான். பொலிஸ் ஆணைக்குழு வில் உள்ள ஒரே முஸ்லிம் என்பது விஷேட அம்சமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இவரின் ஆயுளை நீட்டி எமது சமூகத்திற்கு மென்மேலும் சேவைகள் செய்ய பிரார்திக்கின்றோம்.


எம். றிஸ்கான் முஸ்தீன் (மதனி)

பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட YLM ஸவாஹிர் sir அவர்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள்



இலங்கையின் 17 ஆவது அரசியல் யாப்பு திருத்தச் சட்டத்துக்கு அமைவாக நிறுவப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களில் ஒன்றான பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினராக அல்ஹாஜ் YLM ஸவாஹிர்  அவர்கள்  ஜனாதிபதியினால் இன்று (21-10-2015) தெரிவு செய்யப்பட்டார்.  

பரகஹதெனிய, சிங்ஹபுரையைச் சேர்ந்த இவர், ஈரான் ஐக்கிய அரபு ராட்சியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவராகவும் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டதாரி ஆசிரியராக கடமையாற்றிய இவர் இலங்கை வெளிநாட்டுச் சேவை போட்டிப்பரீட்சையில் சித்தியெய்தி இலங்கையின் தூதுவராக கடமையாற்றி ஒய்வுபெற்றவராவர். மேலும் பல்வேறு அமைச்சுக்களின் ஆலோசகராகவும் அண்மையக்காலம் வரை தமது சேவையை நாட்டுக்காக தொடர்ந்தும் வழங்கிவந்த இவரது சேவைக்கான இன்னுமொரு சன்மானமாக இந்த பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை குறிப்பிடலாம். 

இவரது சிறந்த சேவையை மென்மேலும் தொடர எமது நல்வாழ்த்துக்கள். 

Oct 17, 2015

மோஸ்கோவில் அஷ்ஷெய்க் மாஹிர் அல்முஅய்கிலி குத்பா பிரசங்கம்.

ரஷ்யா தலைநகர் மோஸ்கோவில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசலில் மக்கா ஹரம் ஷரீபின் இமாம் அஷ்ஷெய்க் மாஹிர் அல்முஅய்கிலி இன்றைய தினம் (16-10-2015) குத்பா பிரசங்கம் செய்தார்.

மோஸ்கோவில் நடைபெறும் 16 வது உலகலாவிய அல் குர்ஆன் போட்டியில் நடுவராக கலந்து கொள்ளும் முகமாக கடந்த 11-10-2015 அன்று ரஷ்யா நோக்கி ஷெய்க் மாஹிர் அவர்கள் சென்றமை குறிப்பிடத்தக்கது.

1904 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மோஸ்கோ பெரிய பள்ளி வாசல் 170 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரஷ்ய அதிபர் விலாதிமீர் பூட்டீன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

செய்தி மூலம்: ஸபக் செய்திச் சேவை

தமிழ் மொழியில் றிஸ்கான் முஸ்தீன் மதனி

Oct 11, 2015

அஷ்ஷெய்க் முஹம்மது ரியால் ஸீலானி (ஸாதிக் ஹாஜியார்) பறகஹதெனிய மண்ணின் இன்னுமொரு மறக்க முடியாத ஆளுமை....


 சவுதி அரேபியாவில் குடியுரிமை பெற்று மக்கா புனித ஹரம் ஷரீபிலே அல்குர்ஆன் மற்றும் புத்தகங்கள் தொடர்பான பிரிவுக்கு தலைவராக செயற்படும் ஒரே இலங்கையர் என்பது எம்மனைவருக்கும் பெருமையான விடயமாகும். 
அஷ்ஷெய்க் முஹம்மது ரியால் ஸீலானி (ஸாதிக் ஹாஜியார்) பறகஹதெனிய மண்ணின் இன்னுமொரு மறக்க முடியாத ஆளுமை.... சவுதி அரேபியாவில் குடியுரிமை பெற்று மக்கா புனித ஹரம் ஷரீபிலே அல்குர்ஆன் மற்றும் புத்தகங்கள் தொடர்பான பிரிவுக்கு தலைவராக செயற்படும் ஒரே இலங்கையர் என்பது எம்மனைவருக்கும் பெருமையான விடயமாகும். 

இலங்கை திருநாட்டில் ஏகத்துவக் கொள்கையை நிருவனமயப்படுத்தி, ஜமாஅத் அன்ஸார் ஸுன்னா அல் முஹம்மதிய்யாவை பறகஹதெனியவை தலைமையமாக கொண்டு இலங்கையின் பல பகங்களிலும் அதன் கிளைகளை நிருவிய அல்லாமா தர்வேஷ் ஹாஜியாரின் சிந்தனையில் மக்கமா நகருக்கு சிறிய வயதிலே மார்க்க கல்வியை கற்றுக் கொள்வதாற்காக சென்ற ஷெய்க் ஸாதிக் ஹாஜியார் தர்வேஷ் ஹாஜியாரின் மரைவுக்கு பின் அவருக்கு அடுத்த படியாக சவுதி குடியுரிமையை பெற்று கொண்டு கடந்த பல தசாப்தங்களாக மக்கா ஹரம் ஷரீபில் பல்வேறு உயர் பதவிகளில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்மையில் ஷெக் அவர்கள் அல் அரபிய்யா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தமது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அல்குர்ஆன் மற்றும் புத்தக பிரிவின் சேவைகளை தெளிவு படுத்தும் போது......
(Video Link)

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் சேவைகளை பொருந்திக் கொண்டு நற்கூலி வழங்கிடவும் அவர்களின் இதர சமூகப் பணிகள் தொடரவும் பிரார்தனை செய்வோம்.

By: As- Sheikh M.Riskhan Musteen (Madani) 







Oct 9, 2015

மாதாந்த பயான் நிகழ்ச்சி & பரிசளிப்பு நிகழ்வு



சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் பயான் நிகழ்ச்சி அல்லாஹ்வின் பேரருளால் மிகவும் வெற்றிகரமாக (08-10-2015) நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்வில் அல் கப்ஜி தஃவா நிலைய அழைப்பாளர் அஷ்ஷெய்க் றிஸ்கான் முஸ்தீன் மதனி அவர்கள் "முஹர்ரம் மாதத்தின் சிறப்புக்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பயான் நிகழ்சி முடிவில் கேள்வி - பதில் நிகழ்சி நடைபெற்றது. சரியான பதில் அளித்த ஆண்கள் பிரிவில் 6 பேருக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் எமது தஃவா நிலையத்தில் வாராந்தம் இடம் பெரும் இஸ்லாமிய பாடத்திட்டத்திற்கான பரீட்ச்சையில் சிறந்த புள்ளிகளை பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

01 Seyed Masood 94
02 H. Jainudeen 93
03 Mohamed Anas 89
04 Mohamed Ferose 83  (Paragahadeniya)
05 Abdul Hameed 81
06 Sadiq Basha 81
07 M. Reffai Thullah 81
08 Mohamed Jakariya 77
09 Satham Husain 76
10 Fayaz Mohammed 72
11 Naseer Husain 71
12 Rasmy Mahruf 66
13 Mohamed Mihlar 63
14 M.M Rifkan 61 (Paragahadeniya)

பரிசு பெற்றவர்களில் இரண்டு சகோதரர்கள் எமது  (Paragahadeniya) மண்ணைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்.

பங்குபற்றிய அனைவருக்கும் இராப் போசனம் தஃவா நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வு வெற்றி பெற அனைத்து வகையிலும் உதவிய அனைத்து சகோதரர்களையும் இங்கு நாம் மிக நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். ஜஸாக்குமுல்லாஹு ஹைரன்.

அல் கப்ஜி தஃவா நிலையம்,
தமிழ் மற்றும் சிங்கள பிரிவு.




















Oct 7, 2015

Paragahadeniya Central College [National School]: தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை; வெறும் 5 மாணவர்கள் மாத்திரமே சித்தி


Paragahadeniya Central College [National School]: தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை;
வெறும் 5 மாணவர்கள் மாத்திரமே சித்தி

பரகஹதெனிய தேசியப் பாடசாலையில் இருந்து இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு 138
மாணவர்கள் தோற்றியதில் வெறும் 5 மாணவர்கள்(3.5%) மாத்திரமே சித்தியடைந்திருக்கின்றமை மிகவும் கவலைக்கிடமான விடயமாகும். பரீட்சைக்குத் தோற்றிய 96.5% மாணவர்கள் சித்தியடையாமை வருத்தமளிக்கின்றது.

பெற்றோரிடமிருந்து ஆயிரக்கணக்கில் கரந்தும் அதற்குரிய பிரதிபலன் வெளிக்காட்டப்படாமை  பெற்றோரின் பணத்தையும் கனவையும் தவிடுபொடியாக்குகின்ற விடயமாக அமைந்துள்ளது.

தொடர்ச்சியாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு மிகவும் மோசமானதாகவே இருந்து வருகின்றது. 

பணத்துக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்ததன் பிரதிபலன் தொடர்ச்சியாக தோல்விகளை அளித்துவருவது பாடசாலையின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பதாக  அமைந்துவருவது கசப்பான விடயமாகும்.

எனினும் சித்தியடைந்த அவ்வைந்து மாணவர்களுக்கும்(1 மாணவன், 4 மாணவிகள்)  எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் சித்தியடைந்தோர் விபரம்
1. M I Aysha Hanin - 170
2. M M Husni - 167
3. M H Reema - 161
4. M M Aamina - 156
5. M H Hudha - 154
 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &