Oct 6, 2014
அல்ஹம்து -லில்லாஹ் முழு கிராமும் ஒரே நேரத்தில் பெருநாள் தொழுகையில்
Posted by AliffAlerts on 13:13 in NP | Comments : 0
வரலாற்றில் நீண்டதோர் இடைவேளைக்குப் பிறகு முழுப் பறகஹதெனிய கிராமமும் ஒரே நேரத்தில் பெருநாள் தொழுகையில் பெண்கள் வேறாகவூம்(06:30) ஆண்கள் வேறாகவூம்(07:30) ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. அலஹம்துலில்லாஹ்
வழமையாக ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாயலில் ஆண்கள் பெண்கள் இருசாராருக்கும் தாருத் தௌஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீட மைதானத்தில் காலை 06:30 மணிக்கு தொழுகை நடாத்துவது வழக்கம் எனினும் காலநிலை மாற்றங்கள் ஏற்படின் பெண்களுக்கு 06:30 மணிக்கும் ஆண்களுக்கு 07:30 மணிக்கும் தொழுகை இடம்பெறும்.
பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாயலில் வழமையாக பெண்களுக்கு 07:00(07:30) மணிக்கும் ஆண்களுக்கு 08:00(08:30) மணிக்கும் இடம்பெறுவதே வழக்கம்.
அல்ஹம்துலில்லாஹ் இம்முறை வழமைக்கு மாற்றமாக ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாயலில் ஆண்கள் பெண்கள் இருசாராருக்கும் பள்ளிவாயலில் 06:30 மணிக்கு ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் வழமைபோல் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாயலிலும் அதேபோல் ஆண்கள் பெண்கள் இருசாராருக்கும் தாருத் தௌஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீட மைதானத்தில் காலை 06:30 மணிக்கு தொழுகை நடாத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
எனினும் காலைநிலை குறுக்கிட்டதன் விளைவாக இரு பள்ளிவாயல்களிலும் பெண்களுக்கு 06:30 மணிக்கும் ஆண்களுக்கு 07:30 மணிக்கும் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ் எது எவ்வாறிருப்பினும் கொத்துபாக்கள் வெவ்வேறாக (4) இடம்பெற்றாலும் கிராமத்தின் அனைத்துப் பெண்களும் ஒரே நேரத்தில் தொழுததுடன் அனைத்து ஆண்களும் ஒரு நேரத்தில் தொழுகையில் ஈடுபட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இன்ஷா அல்லாஹ் மாற்றங்கள் இவ்வாறே தோன்ற வேண்டும் தொடரவேண்டும். எதிர்காலத்தில் எமது சகோதரத்துவம் மென்மேலும் ஒன்றிணைய வேண்டும் எமது ஒற்றுமை மேலோங்க வேண்டும் என இந்நந்நாளில் பிரார்த்திக்கிறேன். அல்லாஹ் எம்மனைவரது நல்ல நோக்கங்களையூம் நிiவேற்றி வைப்பானாக.
அபூ முஹம்மது.